fbpx
Homeபிற செய்திகள்விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள், வேலை பார்க்கும் பெண்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு

விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள், வேலை பார்க்கும் பெண்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு

விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள், வேலை பார்க்கும் பெண்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அபர்ணா ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

கோவை வந்த சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அபர்ணா ஆனந்தகுமார் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழ்நாடு ஜிஎஸ்டி துறையானது அனைத்து விருந்தினர் விடுதி உரிமையாளர்கள் தங்களது கட்டணத்திற்கு 18% ஜிஎஸ்டி வசூலித்து கட்டுமாறு ஆணையிட்டு இருந்தது.

அதைத் தொடர்ந்து கோவைவிடுதி உரிமையாளர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் விடுதி கட்டணங்களுக்கு ஜி எஸ் டி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது

இதன் மூலம் கோவையில் 500-க்கும் மேற்பட்ட விடுதிகள், மற்றும் விருந்தினர் தங்குமிடங்கள் 18% ஜி.எஸ். டி யில் இருந்து வரி விலக்கு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது மேற்கண்டவாறு அவர் கூறினார் .

அப்போது கோவை விடுதி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆனந்த் ராமன் செயலாளர் டாக்டர் தமிழ்மணி பொருளாளர் அனுஷா பிரகாஷ் மற்றும் வழக்கறிஞர் நந்தகுமார் தேவராஜ் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img