Homeபிற செய்திகள்என்ஜிபி மழலையர் பள்ளி பட்டமளிப்பு விழா

என்ஜிபி மழலையர் பள்ளி பட்டமளிப்பு விழா

என்.ஜி.பி. மழலையர் பள்ளியின் ஆண்டு விழா, மேல் மழலையர் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர் கேஎம்சிஎச் குழந்தைகள் நல மருத்துவர் ராஜேந்திரன் பேசும்போது, மாணவர்களின் சிறப்பான வளர்ச்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் பள்ளியைப் பாராட்டினார்.

கல்வி மற்றும் பிற இணை பாடத்திட்டங்களின் மூலம் வருங்கால மேதைகளாம் இன்றைய மாணவர்களை சரியான முறையில் செதுக்கும் ஆசிரியர்களையும் பாராட்டினார்.

என்.ஜி.பி கல்விக் குழும நிறுவனர் டாக்டர் நல்ல.ஜி.பழனிசாமி, தாளாளர் டாக்டர்.தவமணி தேவி பழனிசாமி ஆகியோர் மேல்
மழலையர் பள்ளி அரும்புகளுக்கு பட்டமளிப்பு சான்றிதழ்களை வழங்கினர்.

மழலை மாறாத அரும்புகளின் நடனம், நாடகம், இசை நிகழ்ச்சிகள், குறும்படங்கள்என கண்கள் மகிழ்ச்சியிலும் பிரமிப்பிலும் ஆழ்ந்தது.

படிக்க வேண்டும்

spot_img