fbpx
Homeபிற செய்திகள்தன்னாட்சிக் கல்லூரிகளுக்கான தர வரிசையில் டாக்டர் என்.ஜி.பி. கலைக் கல்லூரிக்கு சிறப்பிடம்

தன்னாட்சிக் கல்லூரிகளுக்கான தர வரிசையில் டாக்டர் என்.ஜி.பி. கலைக் கல்லூரிக்கு சிறப்பிடம்

டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இந்தியாவின் தன்னாட்சிக் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 10- வது இடத்திலும் தமிழக அளவில் 4 வது இடத்திலும் உள்ளது.

சமுதாயத்தின் அனைத்து மாணவர்களும் தரமான கல்வியை பெற வேண்டும் என்ற முழக்கத்தோடு கல்வியாளர் மருத்துவர் நல்லா.ஜி பழனிச் சாமியால் உருவாக்கப்பட்டது இக்கல்வி நிறுவனம்.

இக்கல்வி நிறுவனத்தின் செயலர் கல்வியாளர் மருத்துவர் தவமணி டி பழனிசாமி. பெருகி வரும் தேவைகளுக்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தல், நவீன தொழில் நுட்பங்களை மாணவர்கள் எளிதில் கையாளும் வகையில் பாட திட்டங்களை உருவாக்கி, தகுதி வாய்ந்த பேராசிரியர்கள், ஆகிய நிலைகளில் மேம்பட்ட திறனை உருவாக்கும் வகையில் உலகத் தரத்திற்கு இணையான கல்வி வழங்க இக்கல்லூரி உறுதி பூண்டுள்ளது.

சமூகத்தின் மதிப்பீடுகள், நல்ல குணநலன்களை உருவாக்குதல் மற்றும் தொழில் மேம்பாடு பற்றிய சிறப்பான புரிதல்களை மாணவர்களுக்கு அளித்தமையைப் பாராட்டியும் ஆசிரியர் திறன் 200க்கு 172 மதிப்பெண்களும், ஆசிரியர் நலன் மேம்பாடு 75, உள்கட்டமைப்பு 77, தலைமைத் துவம்/ஆளுமை போன்றவற்றிற்கு ஒவ்வொரு கூறுகளிலும் 100க்கு 77 என மொத்தம் 700க்கு 553 பெற்று இந்நிறுவனம் சிறந்து விளங்குகிறது.

இந்த விருது டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வழங்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் தொடர்ந்து அயராது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img