அமேசான் ‘எக்கோ பாப்’ (Echo Pop) தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. எக்கோ குடும்பத்தில் புதிய அங்கமான இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் ரூ.4,999 விலையில் கிடைக்கும். இந்த புத்தம் புதிய அரைக்கோள வடிவிலான தயாரிப்பு வெள்ளை மற்றும் கருப்பு நிறம் தவிர பச்சை மற்றும் ஊதா வண்ணங்களிலும் கிடைக்கிறது.
இவை எந்தவொரு வீட்டின் அழகியலையும் மேலும் மேம்படுத்தும். Echo Pop பின் பிரத்யேக-வடிவமைப்பு கொண்ட முன்னோக்கிய ஸ்பீக்கர் உரத்த ஒலி, சமநிலைகொண்ட பாஸ் மற்றும் துல்லியமான குரல்களை வழங்கும்.
“Echo Pop என்பது சக்திவாய்ந்த ஆடியோ, Alexaவின் முழு திறன்கள் மற்றும் ஸ்டைலான வடிவமைப்பு ஆகியவற்றின் கலவையாகும். இந்த சமீபத்திய ஸ்மார்ட் ஸ்பீக்கர் மூலம், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் விருப்பங்களை வழங்க வடிவமைப்பில் புதுமைகளை மேம்படுத்தியுள்ளோம்” என்று அமேசான் டிவைசஸ் இந்தியாவின் இயக்குநரும், தேசிய மேலாளருமான பராக் குப்தா தெரிவித்தார்.
Echo Popபின் முன்பக்க திசை ஸ்பீக்கர் தெளிவான குரல், சமநிலையான பாஸ் மற்றும் உரத்த ஒலியை வழங்குகிறது. Amazon Prime Music, Hungama, Spotify, JioSaavan, Apple Music மற்றும் பிறவற்றிலிருந்து பாடல்களை இசைக்குமாறு Alexaவிடம் வாடிக்கையாளர்கள் கேட்கலாம் (சில பயன்பாடுகளுக்கு சந்தா தேவைப்படலாம்).
போனின் புளூடூத் வழியாக Echo Pop ஐ இணைப்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்க ளுக்குப் பிடித்த இசையை ஸ்ட்ரீம் செய்யலாம்.



