அன்பு செய் ஆண்டின் பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டத்தின் அமைச்சரவை பதவியேற்பு விழா நேற்று பொள்ளாச்சியில் உள்ள அருணாச்சலம் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் லயன்ஸ் ஆளுநர் நித்தியானந்தம் மாவட் டத்தின் சேவை திட்டமான பெண்கள் மார்பக புற்று நோய் கண்டறிதலுக்கான பேருந்து மற்றும் மருத்துவ குழுவிற்கு ரூபாய் ஒரு லட்சம் நன்கொடை வழங்கிய மகாகவி பாரதியார் மண்டல தலைவர் செந்தில்குமாரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்வில் மாவட்ட முதல் பெண்மணி டாக்டர் சாய் பிரியா முதலாம் துணை ஆளுநர் ராஜசேகர், அவரது மனைவி நந்தினி, இரண்டாம் துணை ஆளுநர் செல்வராஜ் அவரது மனைவி ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.