தூத்துக்குடி, பண்டாரம் பட்டி தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் 2025-2026 கல்வி ஆண்டின் இரண்டாம் பருவ தொடக்க நிகழ்ச்சியாக புதிய பயணத்தின் புன்னகை நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அருள்திரு ஜெபஸ்டின் தங்கபாண்டி தலைமை தாங்கினார். ரீத்தம்மாள்புரம் பங்கின் அருள்தந்தை அத்தனாசியூஸ் ஜோ மற்றும் லயன் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இரண்டாம் பருவ தொடக்க நாளில் புன்னகை பூத்த முத்துடன் பள்ளிக்கு வருகை தந்த அனைத்து மாணவ மாணவியருக்கும் பள்ளியின் தாளாளர் அருள்திரு ஜெபஸ்டின் தங்கபாண்டி மாணவர்களை வாழ்த்தி ஆசி வழங்கினார். பள்ளியின் தாளாளர், ரீத்தம்மாள்புரம் பங்கு ஆயர் மற்றும் தூத்துக்குடி மாமன்ற 1வது உறுப்பினர் இணைந்து மாணவர்களுக்கு சால்வை அணிவித்தும், புன்னகை பூத்த முகங்களுக்கு மணம் வீசும் மலர் கொடுத்தும் வரவேற்றனர். அருள்தந்தை அத்தனா சியூஸ் ஜோ தேசியக் கொடி ஏற்றுவித்து சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் தாளாளர் ஆசி கூற விழா இனிதே நிறைவுற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜ் ஏற்பாடு செய்திருந்தார். பெற்றோர் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



