fbpx
Homeபிற செய்திகள்நேபாளத்தில் சர்வதேச பாரா த்ரோ பால் போட்டி - கோவை வீரர்கள் பங்கேற்பு

நேபாளத்தில் சர்வதேச பாரா த்ரோ பால் போட்டி – கோவை வீரர்கள் பங்கேற்பு

சர்வதேச அளவிலான “பாரா த்ரோ பால்” விளையாட்டு போட்டி நேபாளம் நாட்டில் வருகிற 19-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி முடிய 3 நாட்கள் நடக்கிறது.

இதுகுறித்து பாரா த்ரோ பால் பெடரேஷன் தேசிய தலைவர் டாக்டர் ஆல்பர்ட் பிரேம்குமார், கோவை சரன்ஸ் மருத்துவமனை நிறுவன தலைவர் ஆர்.சரண், கோவை மாவட்ட பாராத்துரோ பால் விளையாட்டு சங்க செயலாளர் மோகன்குமார், விளையாட்டுவீரர் சதீஷ்குமார் ஆகியோர் கூறியதாவது:-

முத்தரப்பு போட்டி

நேபாள நாட்டில் உள்ள காட்மாண்டுவில் சர்வதேச அளவிலான பாரா த்ரோ பால் விளையாட்டுப் போட்டி முத்தரப்பு போட்டியாக நடைபெறும். இந்த விளையாட்டு போட்டியில் இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சேர்ந்த 36 விளையாட்டுவீரர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த போட்டிகள் வருகிற 19ம்தேதி தொடங்கி 21-ந்தேதி முடிய 3 நாட்கள் நடக்கிறது.

இதில் பங்கேற்க தேசிய அளவில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் 3 பேர்.அதில் கோவையை சேர்ந்த தேசிய விளையாட்டு வீரர்கள் மோகன்குமார், சதீஷ்குமார், மயிலாடுதுறையை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் அடங்குவர். மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

நேபாள நாட்டில் நடைபெறும் இந்த முத்தரப்பு போட்டியில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்கள் 12 பேரை தேசிய தலைவர் டாக்டர் வி. ஆல்பர்ட் பிரேம்குமார், டாக்டர் சரண் ஆகியோர் தலைமை தாங்கி அழைத்துச் செல்கின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img