fbpx
Homeபிற செய்திகள்நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை 38 ஆம் ஆண்டு தொடக்க விழா

நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை 38 ஆம் ஆண்டு தொடக்க விழா

நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை 38 ஆம் ஆண்டு தொடக்க விழா கடந்த 13ம் தேதி மாலை அவிநாசி சாலையில் அமைந்துள்ள ஹிந்துஸ் தான் கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் நடை பெற்றது. விழாவின் தொடக்கமாக டி.செல்வ தேவன் வரவேற்புரை ஆற்றினார்
விழாவின் சிறப்பு விருந்தினராக சக்தி சுகர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர் எம்.மாணிக்கம் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்
விழாவின் சிறப்பு நிகழ்வாக “The Champion of Change” எனும் நூல் வெளி யிடப்பட்டது. நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளையின் 37 ஆண்டுகளாக நடைமுறைப டுத்தப்பட்ட நிகழ்வுகள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் அந்தப் புத்தகம் குறித்து, எஸ்.அருள்துரை மற்றும் இ.பிரபு சங்கர் ஆகியோர் தங்களது அனுபவங்களையும், இந்தப் புத்தகத்தின் முக்கியத் துவத்தையும் பகிர்ந்து கொண்டனர், அவற்றில் புத்தகம் எவ்வாறு வாழ்விய லையும், கல்வியையும், சிந்தனையையும் தீட்டுவதற்கு வழிகாட்டுகிறது என் பதை நன்கு விளக்கியதோடு, வாசகர்களுக்கு இது ஒரு முக்கியமான வழிகாட்டி நூலாகவும் இருக்கும் என்பதை வலியுறுத்தி னார்கள். என்.எம்.சி.டி அமைப்பின் நிறுவனர் மற்றும் அறங் காவலர் ஏ.எஸ்.சங்கரநாராயணன், தனது வாழ்வின் தொடக் கத்திலிருந்தே சமூக நலன், கல்வி மேம்பாடு மற்றும் ஆரோக்கியம் ஆகிய துறைகளில் மக்களின் வாழ்க்கையை மாற்றும் பணியில் முழு மையாக ஈடுபட்டு வரு வதை குறிப்பிட்டார். கடந்த 37 ஆண்டுகளில் அமைப்பின் வளர்ச்சியையும், அதில் பங்களித்த ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பையும் உளமார்ந்த நன்றியுடன் நினைவுகூறினார். இவ்விழா, மேலும் சமூக சேவையை வழிகாட்டும் ஒளியாய் இருக்க வேண்டும் எனத் தெரிவித்து, அனைவரையும் தொடர்ந்து ஆதரிக்க அழைப்பு விடுத்தார்.

பாலகுமார் தங்கவேலு (Cognizant) புத்தகத்தைப் பற்றிய தனது விமர்சனத்தை பகிர்ந்து கொண்டார். சமூக சேவையின் தேவையும், தன்னார்வ முயற்சிகள் எப்படி ஒரு சமூக மாற்றத்தை உருவாக்க முடியும் என்ப தையும், புத்தகத்தின் உள்ள டக்கம் மிகவும் அர்த்தமுள்ளதாகவும், ஊக்க மளிப்பதாகவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இவ்வகையான புத்தகங்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்றும், தன்னார்வத்தின் மதிப்பை உணர்த்தும் ஒரு சிறப்பான முயற்சி யாக இதை அவர் பாராட்டினார்.

நிகழ்வின் முடிவில் சீத்தாலட்சுமி (என்.எம்.சி.டி) நிறுவனர் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img