fbpx
Homeபிற செய்திகள்தேசிய சிலம்பம் பெடரேஷன் கோப்பை: தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன்

தேசிய சிலம்பம் பெடரேஷன் கோப்பை: தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் நடத்தும் 1-வது தேசிய பெடரேஷன் கோப்பை சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி கடலூர் மாவட்டத்தில் செயின்ட் ஜோசப் கலைக் கல்லூரி யில் அக். 5 முதல் 8 வரை போட்டிகள் நடந்தன.

போட்டிகள் கடலூர் மாவட்ட அமெச்சூர் சிலம்ப சங்கம் சார்பில் நடத்தப்பட்டன.
போட்டியினை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார்.

கோவை சிலம்பாலயா மற்றும் இம்மார்டல் ஸ்போட்ஸ் அகாடமி மாணவ மாணவிகள் 20 பேர் கலந்து கொண்டு 13 தங்கம், 2 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் வென்றனர்.

ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழ்நாடு பெற்றது.
மகாராஷ்டிரம் இரண்டாம் இடமும், பாண்டிச்சேரி முன்றாம் இடத்தையும் பிடித்தது.

வெற்றி கோப்பையினை உலக சிலம்ப சம்மேளனம் நிறுவனர் பேரா சான் செல்வராஜ் வழங்கினார். மினி சப் ஜுனியர் பெண்கள் பிரிவில் நேகா ஸ்ரீ குத்துவரிசையில் தங்கம், ஆண்கள் பிரிவில் சஞ்ஜித் ஒற்றை சுருளில் தங்கம், சச்சின் ஆலிவர் குத்துவரிசையில் வெண் கலம், சப் ஜுனியர் பெண்கள் பிரி வில் நேத்ராஸ்ரீ இரட்டை வாளில் தங்கம், ஜாக்குலின் நேத்ரா ஒற்றை சுருள்வாளில்தங்கம், ஸ்வர்ணிகா கம்பு சண்டையில் வெண்கலம், ஆண்கள் பிரிவில் தருண் ஒற்றை வாள்வீச்சில் தங்கம், ராகுல்
இரட்டை சுருள் வாள்வீச்சில் தங்கம், நௌனீத் கம்பு சண்டையில் தங்கம், ஹிரிதிக் கிஷன் இரட்டை கம்புவீச்சில்தங்கம், ரூபேஸ் குத்துவரிசையில் வெண்கலம், ஜூனியர் பெண்கள் பிரிவில்
அக்க்ஷதா இரட்டை சுருள்வாள்வீச்சில் தங்கம், ஷிவானி குத்துவரிசையில் தங்கம், மேரி பிரியதர்ஷினி கம்பு சண்டை யில் தங்கம், நிதர்சனா இரட்டை வாள்வீச்சில் வெள்ளி, ஜெஸ்லின் கம்பு வீச்சில் வெள்ளி, ஆண்கள் பிரிவில் நிகிலேஷ்
இரட்டை வாள் வீச்சில் தங்கம், ஹேமந்த் கம்பு சண்டையில் தங்கம், சர்வேஷ் ஒற்றை சுருள்வாள் வீச்சில் வெண்கலம் மற்றும் மித்ரேஷ்ராம் கம்பு சண்டை யில் வெண்கலம் வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பலாயா தலைமைஆசிரியர் செல்வக்குமார், பயிற்சியாளர்கள் சரண்ராஜ், ரஞ்சித்குமார், அருண் பாண்டியன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், பெற்றோர் வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img