ஹோமியோபதி மருத் துவர்கள் சங்கம் சார்பில் சிந்தசிஸ் தேனி -2023 மருத்துவ கண்காட்சி தேனி வெஸ்டர்ன் காட்ஸ் ஹோட்டலில் நடந்தது.
சென்னை தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் முன்னாள் தலைவர் டாக்டர் ஹனி மன், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பேரா சிரியர் தலைமை அதிகாரி டாக்டர் இராமசுந்தர் தலைமை தாங்கினர்.
ஈரோடு தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் ஆலோசகர் முன்னாள் தலைவர் டாக்டர் ஜவஹர், தேனி ஆயுஷ் மருத்துவமனை டி.எஸ்.எம்.மோ. டாக்டர் மாரியப்பன் (தேனி அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனை), கன் னியாகுமரி மாவட்ட நாகர் கோவில் ஹோமியோபதி மருத்துவர்சங்கம் செயலா ளர் டாக்டர்எபிமோசஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் நகர்மன்றத் தலைவர் ரேணுப்பிரியாபாலமுருகன் துவக்கி வைத்தார். மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்து பொருட்கள் உள்பட 11 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சியில் மதுரை திருமங்கலம் அரசு மருத்துவ ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் பாவலன், உதவி பேராசிரியர் டாக்டர் ஞானபிரகாசம், தேனி ஹோமியோபதி சங்கத் தலைவர் ஹனி மன் ஹோமியோ மருத்துவமனை டாக்டர் சரவணன், செயலாளர் டாக்டர் நாராயணன், பொருளாளர் டாக்டர் விஜயராஜன் உள் பட தமிழகத்தில் உள்ள அனைத்து ஹோமியோபதி மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை டாக்டர் தியாகராஜன், டாக்டர் ராஜ்குமார், டாக்டர் கார்த்திகேயன், டாக்டர் மரகதம், டாக்டர் விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.