ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளி துரைப்பாக்கம் கிளை, எட்டாம் வகுப்பு மாணவர்க ளுக்காக நிதி அறிவு மற்றும் தோட்டக்கலை ஆகிய இரு பாடத்திட்டங்களை ஒன்றி ணைத்து, ‘வளரும் உழவர் சந்தை செயல்பாடு’ என்ற புதுமை கூடிய தனித்துவமான நிகழ்ச்சியை மிக வெற்றிகரமாக நடத்தியது.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக வளரும் உழவர் சந்தை நிகழ்ச்சியில் மாணவர்கள் தாங்கள் விளைவித்த பயிர்களை, பள்ளியின் பாலிஹவுஸில் கண்காட்சிப்படுத்தினர். தங்களது விளைச்சலை சந்தையில் கலந்து கொண்ட பெற்றோருக்கு சந்தை முறையில் விற்றனர்.
ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளி
மாணவர்கள் விற்பனை, சந்தைப்படுத்தல் முதலிய பல குழுக்களை உருவாக்கி, சந்தையில் தற்பொழுதுள்ள விலைகள் மற்றும் ஒவ்வொரு பயிருக்குமான நிலையான விலைகளைக் குறித்து ஆய்வு செய்தனர். பயிர்களின் வாழ்க்கை சுழற்சி, அவற்றின் அறுவடை நுட்பங்கள் குறித் தும் சந்தையில் விளக்கினர்.
துரைப்பாக்கம் கிளையிலுள்ள ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் டாக்டர் ஜெமி சுதாகர் நிகழ்ச்சி குறித்து தெரிவிக்கையில், “வளரும் உழவர் சந்தை நிகழ்வின் வெற்றியால் நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம். மாண வர்களுக்கு மிக முக்கியமான வாழ்க்கைத் திறன்களை வளர்க்க உதவும் செயல்முறை கற்றல் வாய்ப்புகளை அளிப் பதே முக்கிய நோக்கம். தோட்டக்கலை மற்றும் நிதிக் கல்வியறிவு பாடத் திட்டத்தின் தொகுப்பு மாபெரும் வெற்றியை நிரூபித்துக் காட்டியுள்ளது.
மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் மற்றும் ஈடுபாடுள்ள கற்றல் சூழலை வழங்குவதில், பள்ளியின் அர்ப்பணிப்புக்கு இந்த வளரும் உழவர் சந்தை செயல்பாடு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்” என் றார்.நிகழ்வில் மாணவர்களின் ஆர்வமான பங்கேற்பு, இயற்கை மற்றும் சமுதாயத்தின் மீதான உரிமையையும் பொறுப்புணர்வையும் அவர் களுக்குள் விதைத்துள்ளது. கடின உழைப்பு, குழுப்பணி மற்றும் குழு ஒத்துழைப்பின் மதிப்பைப் பற்றிய புரி தலையும் மாணவர்கள் பெற் றுள்ளனர். வளரும் உழவர் சந்தை செயல்பாட்டின் மூலம், மாணவர்கள் தங்களது தத்துவார்த்த அறிவை (பிராக்டிகல்) நடைமுறை அனுபவத்திற்கு உபயோ கப்படுத்த முடிந்தது. இந்நிகழ்வு கற்றல் முறையை மிகப்பயனுள்ளதாகவும் சுவார சியமானதாகவும் ஆக்குகிறது.