கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவமனையில், கருவில் இதய நோய்கள் மற்றும் முன்கால ஸ்கேனிங் தொடர்பான இருநாள் தேசிய அறிவியல் மாநாடான ஃபெடல் எக்கோகான் 2026 சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாநாடு பிப்ரவரி 7 மற்றும் 8, தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டிற்கு 4 டி.என்.எம்.சி கிரெடிட் பாயிண்ட்ஸ் வழங்கப் படுகிறது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து கருவில் மருத்துவ நிபுணர்கள், குழந்தை இதய மருத்தவர்கள், மரபணு நிபுணர்கள், நியோநேட் டாலஜிஸ்ட்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் பங்கேற்றனர். பி.எஸ்.ஜி. மருத்துவமனை டாக்டர் லலிதா மாநாட்டின் அறிமுக உரையை வழங்கினார். பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜெ.எஸ். புவனே ஸ்வரன் மற்றும் பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் முதல்வர் டாக்டர் சுப்பராவ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வாழ்த்துரை வழங் கினர்.
விழாவில் பேராசிரியர் சுரேஷ் சேஷாத்ரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. டாக்டர் இந்திராணி சுரேஷூக்கு Pioneer in Fetal Echocardiography விருது வழங்கப்பட்டது.
ஐ.எஸ்.யு.ஓ.ஜி அமைப் பின் தலைவர் ப்ரொஃ. ரீம் அபு ரஸ்டம் “எவரி லிட்டில் ஹார்ட் மேட்டர்ஸ்” திட்டம் குறித்த சிறப்புரை ஆற்றினார்.
இந்த மாநாட்டில் 3டி/4டி/எஸ்.டி.ஐ.சி இமேஜிங், முதல் மூன்று மாத கருவில் இதய குறைபாடுகள், கருவில் அரித்மியா, மரபணு காரணிகள் போன்ற தலைப்புகளில் கேஸ் அடிப்படையிலான கலந் துரையாடல்கள் மற்றும் பயிற்சிகள் இடம்பெற்றன.
மாதர் மற்றும் கருவின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் பி.எஸ்.ஜி. மருத்துவமனை தொடர்ந்து முன்னோடியாக செயல்படும் என்று நிர்வாகம் தெரிவித்தது.



