fbpx
Homeபிற செய்திகள்தேசிய வில் விளையாட்டு போட்டியில் கோப்பைகளை வென்ற தமிழ்நாடு அணி

தேசிய வில் விளையாட்டு போட்டியில் கோப்பைகளை வென்ற தமிழ்நாடு அணி

ஈரோட்டில் தேசிய அளவிலான இரண்டாம் ஆண்டு ஜெயம் கோப்பைக்கான வில் விளையாட்டு போட்டிகள் சித்தோடு கங்காபுரத்தில் உள்ள டெக்ஸ்வேலியில் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 380 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழ்நாடு முதல் 3 கோப்பையை பெற்றது. நான்காம் கோப்பையை தெலுங்கானா மாநிலம் பெற்றது. முன்னதாக போட்டியினை தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் யுவராஜா துவக்கி வைத்தார்.

மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகளளை வழங்கினார்.

தமிழ்நாடு வில்விளையாட்டு சங்க பொதுச் செயலாளர், ஜெயம் வில்
விளையாட்டு பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர் தி.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக இந்துஸ்தான் வில் விளையாட்டு சங்கத்தலைவர் மணிவாசகம் மற்றும் பொதுச் செயலாளர் செந்தில். நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிர்வாக அலுவலர் ஸ்ரீனிவாசன், உடற்கல்வி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, இயற்பியல் துறை தலைவர் டாக்டர் தமிழ்செல்வன், ஈரோடு மாவட்ட வில் விளையாட்டு சங்கத் தலைவர் தேவகாந்தன், சமூக சேவகர் ஸ்ரீதேவி செந்தில் குமார், தற்காப்பு பயிற்சியாளர் நாவலன் ஆகியோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img