Homeபிற செய்திகள்நாம் இந்தியர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்

நாம் இந்தியர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்

தூத்துக்குடியில் நாம் இந்தியர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் 2026 சட்டப் பேரவைத் தேர்தல் முதற்கட்ட தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா நடந்தது. கட்சியின் நிறுவனத்தலைவர் என் பி.ராஜா தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பெ.பொன்ராஜ். பொருளாளர் பேரூரணி டி.ஜெய்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் கட்சித் தலைவர் என்.பி.ராஜா தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:

தமிழக மக்களுக்கு இலவசங்கள் தேவையில்லை. வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சிதான் அவசியம் புதிதாகக் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் உள்பட பல அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் இலவசங்களை அறிவித்து வருகின்றன. ஆனால், நாங்கள் இலவசங்கள் இல்லாத தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். மக்கள் எங்கள் கொள்கை களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

உலக வங்கி கடன் பெறாமல் அரசின் வரி வருவாய் மூலம் மக்களின் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சொந்த வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை, அரசு மருத்துவமனைகளில் உலகத் தரத்தில் இலவச சிகிச்சை, அரசு பள்ளிகளில் தரமான கல்வி, காவல் துறையில் புதிய நியமனங்கள், அரசு சேவைகள் முழுமையாக கணினிமயமாக்குதல், விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்செய்தல் போன்ற விவ சாயம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து 41 வகை யான திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தெற்கு சங்கரன் வடக்கு கருப்பசாமி, துணை செயலாளர்கள் சின்னதுரை குட்டி, சேசுராஜேந்திரன், தொழில்நுட்ப அணி செயலாளர் சுந்தர். இளைஞ ரணி செயலாளர் உடையார். வடக்கு மண்டல செயலாளர் சௌந்தரராஜன், அவைத்தலைவர் அமிர்தகாந்தன் மற்றும் பாலமுருகன் எட்வின், நெல்லை மாவட்டச்செய வாளர் ராமகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img