Homeபிற செய்திகள்கோவையில் அன்னதானம் வழங்கிய நா.கார்த்திக்

கோவையில் அன்னதானம் வழங்கிய நா.கார்த்திக்

கோவை காந்திபுரம் தி.மு.க. பகுதி கழகம் ஆட்டோ சங்கம் அணி சார்பில் டாடாபாத் 7வது வீதியில் பாரத் எலக்டரானிக்ஸ் அருகில், நாடாளுமன்ற தேர்தலில் 40/40 வெற்றி விழா, கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் தொழிற்சங்க கொடியேற்று விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ ) கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்து ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இந்த விழாவிற்கு காந்திபுரம் பகுதி திமுக செயலாளர் ஆர்.எம்.சேதுராமன் முன்னிலை வகித்தார் . விழாவில் டெம்போ சிவா, கராத்தே அர்ஜுனன், சுரேஷ், சம்பத், பழனிச்சாமி, பாலு, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img