தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் டாக்டர் ஆர்.வி. ஐயா குருதி கொடை மக்கள் இயக்கம் என்ற பெயரில் மக் கள் உயிர் காக்கும் சேவை தொடங்கப்பட்டது.
உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப் பட்டது. புதிய உறுப்பினர் சேர்க்கப்பட்டனர். கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் முத்தரையர்கள் தங்களை எப்படி கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செய லாளர் பிச்சமணி, மாநில இளைஞரணி இணைச் செயலாளர் திருப்பூர் சங்கர் முத்தரையர், முகவை சேகர், லயன் மோகன், திருப்பூர் மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட இளைஞரணி தலைவர் மோகன் குமார், மாவட்ட அமைப்பாளர் காளிதாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் தமிழ் , மாவட் டத் துணைத் தலைவர் முனியப்பன், மாவட்ட துணைத் தலைவர் குணசீலன், மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சரவணன், தாராபுரம் நகரத் தலைவர் வீர மணிகண்டன், தாராபுரம் நகர இளைஞரணி செயலாளர் விக்னேஷ், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றிய தலைவர் சகோதரர் மனோகரன், மற்றும் ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.