fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல் மாவட்டத்தில் 1 கோடி பனை விதைகள் நடும் இயக்கம்: அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டத்தில் 1 கோடி பனை விதைகள் நடும் இயக்கம்: அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டம், மோக னூர் அருகில் உள்ள ஒருவந்தூர் காவிரி கரையில், 1 கோடி பனை விதைகள் நடும் இயக்கத்தை, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

தமிழக முதல்வர் அறிவுறுத்த லின் பேரில், தமிழ்நாட்டின் மாநில மரமான, பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளை ஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் விதமாகவும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற் றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து, காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி, தமிழகத்தில் ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 4 நகராட்சிகள், 19 டவுன் பஞ்சாயத்துகள், 14 ஊராட்சி ஒன் றியங்கள் மற்றும் 308 பஞ்சாயத்துகளில், ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள், காவிரிக் கரையோரப் பகுதிகள் மற்றும் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள், பள்ளி, கல் லூரி வளாகம், நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள ஏரிகள், வாய்க் கால் கரையோரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,53,450 பனை விதைகள் நடும் பணி நடைபெற உள்ளது.

இதன் முதல் கட்டமாக, நாமக்கல் மாவட்டம், ஒருவந்தூர் காவிரி கரையில் நடைபெற்ற, 1 கோடி பனை விதைகள் நடும் இயக்கம் தொடக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என். இராஜேஷ்குமார் எம்.பி., நாமக்கல் சட்ட மன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் விழாவில் கலந்துகொண்டு ஒரு பனை விதையை நட்டு ஒரு கோடி பனை விதைகள் நடும் இயக்கத்தை தொடங்கிவைத்தார்.

இதைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 14 ஊராட்சி ஒன்றியங்களில், 308 ஊராட்சிகளில் 378 இடங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 32,200 பனைவிதைகள், வேளாண்மை துறை சார்பில் 14,000 பனைவிதைகள், தோட்டக் கலைத் துறை சார்பில் 28,000 பனைவிதைகள், பள்ளி மற்றும் கல்லூரிகள் சார்பில் 14,000 பனை விதைகள் என மொத்தம் 88,200 பனைவிதைகள் நடப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ஜோசி, மாவட்ட வன அலுவலர் ச.கலாநிதி,திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சு.வடிவேல், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பொ.பேபிகலா, நெடுஞ்சாலைகள் துறை கோட்டப்பொறியாளர் திருகுணா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) இராமசந்திரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கி.கணேசன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (நாமக்கல்) ரகுநாதன், கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்.ஹரிகிருஷ்ணன், தன் னார்வலர் விஸ்வநாதன் (தட்டான் குட்டை) சித்ரா (துளிர்விடும் பாரதம்),பிரகாஷ் (விடியல் ஆரம்பம் அறக்கட்டளை), இராஜசேகர் (அரசு சார்பற்ற அமைப்பு) ,தில்லை சிவக்குமார் (பசுமை நாமக்கல்), சுற்றுச்சூழல் அமைப்புகள், தன்னார்வலர்கள், மாணவர்கள், சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img