கிருஷ்ணகிரி ஒன்றியம் பச்சிகானப் பள்ளி பஞ்சாயத்து புதுபேயனப்பள்ளி கிராமத்தில், ஜல் ஜீவன் 2024-2025ம் ஆண்டு நபார்டு திட்டத்தில், 8.04 லட்சம் ரூபாய் மதிப்பில், 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கப்படுகிறது.
இதே திட்டத்தில், பெரியமுத்தூர் பஞ்சாயத்து உத்தேரிகொட்டாய் கிரா மத்தில், 18.42 லட்சம் ரூபாய் மதிப்பில், 30,000 லிட்டர் கொள்ளளவில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்படுகிறது.
மேலும், 2024-2025ம் ஆண்டு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், பெரியமுத்தூர் பஞ்சாயத்து புல்லுகாரன்கொட்டாய் கிராமத்தில், 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய ஆழ் துளைக் கிணறு, பவர் பம்பு பைல்லைன் மற்றும் மினி டேங்க் அமைக்கப்படுகிறது.
மொத்தம், 29.96 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை, கிருஷ்ணகிரி அ.தி.மு.க, எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் கன்னியப்பன், சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, கவுன்சிலர்கள் ஜெயராமன், மகேந்திரன், சோக்காடி பஞ்., தலைவர் கொடிலா ராமலிங்கம், காட்டிநாயன்பள்ளி பஞ்., துணைத் தலைவர் நாராயணகுமார், கிளை செயலாளர் சேகர், வெங்கடேசன், வேணுகோபால், மாதேஷ், வார்டு உறுப்பினர் கண்ணையன், 1வது வார்டு உறுப்பினர் காவேரியம்மாள் கண்ணாயிரம், பெரியமுத்தூர் பஞ்சாயத்து துணைத் தலைவர் ராஜசேகர், முன்னாள் கவுன்சிலர் ரவி, சின்னசாமி, மோகன்குமார், கண்ணாயிரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



