தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடந்த டிசம்பர் 17, 18 தேதிகளில் பெய்த அதிகனமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளில் வெள்ள மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்ட தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி ராமநாதபுரம் மீனவர்களுக்கு, தூத்துக்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாராட்டு விழா விற்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமை வகித்தார். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மீன்பிடித்துறைமுக மேலாண்மை பிரிவு உதவி இயக்குநர் விஜயராகவன், வரவேற் புரையாற்றினார்.
மீனவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் நினைவு பரிசு வழங்கிய திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, விழாவில் பேசுகையில்;
மக்களுக்கு ஏற்பட்ட இன் னல்களை கருத்தில் கொண்டு அந்த பணியை செய்வதற்கு புன் னகையோடு வந்ததை எண்ணி எல்லோரும் மகிழ்கிறோம். உங்களிடமோ சில கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்டு. அதையெல்லாம் மறந்து மனித நேயம் தழைத்தோங்கும் வகையில் மனித நேயத்தோடு பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து பணி செய்த மீனவர்களை கௌர விக்கும் விதமாக இந்த விழா நடைபெறுகிறது.
பெய்த மழை வெள்ளத்தின் போது பல பகுதிகளுக்கு அமைச்ச ரோடு சென்ற போது சில பகுதி களில் தண்ணீரின் அளவு அதிக அளவு வந்து கொண்டிருந்தது. அந்த பகுதியில் நாம் செல்லமுடியுமா என்று எண்ணிய போது கயிறு கட்டிக்கொண்டு அதை பிடித்துக் கொண்டும் சில பகுதிகளுக்கும் சென்று மக்கள் நலன் தான் என்று பணி செய்தோம். இந்த காலக்கட்டத்தில் இந்த மாவட்டத்தை பொறுத்தவரையில் கலெக்டர், அதிகாரிகள், அமைச் சர்கள், எம்.எல்.ஏக்கள், மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவருமே களப்பணியில் முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி பணியாற்றினோம்.
இதில் குறிப்பாக அனைவரும் தமிழர்களாக இருந்து விருப்பு வெறுப்புகளை கடந்து பணியாற்றியது தான் மிகப்பெரிய சாதனை அதிலும் எவ்வித எதிர்பார்ப்பு இன்றி உணவுகளை கூட உட்கொள்ளாமல் பணி செய்த மீனவர்கள் தான் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளர், அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்; எதிர்பாராமல் பெய்த அதிகன மழையால் ஏற் பட்ட வெள்ளத்தின் போது பல பகுதிகளிலிருந்து ஒட்டு மொத்த மாக வந்த ஒரே குரல் படகு வேண்டும். எங்களை மீட்க வேண்டும். என்ற கோரிக்கைதான் வந்தது. அதையும் உடனடியாக பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பலரையும் மீட்டோம். அதிலும் கனிமொழி எம்.பி அவர்கள் 10 நாட்களாக கடுமையாக பணி செய்தார்கள். மீனவர்களாகிய நீங்கள் எவ்வளவு சீரமப்பட்டு எங்களோடு ஒத்துழைத்தீர்கள் என்று உங்களது பணிக்கு நான் மிகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், என் றார்.
தெற்கு மாவட்ட திமுக செய லாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில்; படகோட்டி திரைப்பட பாடல் தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான் என்ற பாடலை முழு மையாக பாடியதும் ஒட்டுமொத்த மீனவர்களும் கைதட்டி உற்சாகம் ஊட்டினார்கள்.
தூத்துக்குடி மாவட்ட மழை வெள்ள பாதிப்பின் போது 183 படகுகள் 68 பரிசல்கள் இயக்கப்பட்டு 700 மீனவர்கள் முழுமையாக பணியாற்றினார்கள்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை ஆணையர் பழனிச்சாமி, சட் டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண் டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, திமுக மாநில வர்த்தக அணி துணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் வழக்கறிஞர் செல்வகுமார், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு அருட்திரு பென்சிகர், கல்லா மொழி மீனவ கல்வி மையம் அருட்தந்தை சந்தியா சதீஷ் மற்றும் மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர்கள் ஸ்ரீதர் ரொட்ரிகோ, அந்தோணி ஸ்டாலின், இலக்கிய அணி அமைப்பாளர் வழக்கறிஞர் ரகுராம், உள்பட பலர் கலந்து கொண்டனர். மீன்வளத்துறை உதவி இயக்குநர் புஷ்ரா சப்னம், நன்றியுரையாற்றினார்.