fbpx
Homeபிற செய்திகள்அறிவியல் கண்காட்சியில் வேளாளர் பள்ளி மாணவிகள் முதல் பரிசு

அறிவியல் கண்காட்சியில் வேளாளர் பள்ளி மாணவிகள் முதல் பரிசு

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கோவை மாவட்ட மாணவர்களுக்கான சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியை சேலத்தில் சமீபத்தில் நடத்தியது. அறிவியல் கண்காட்சியில் சுமார் 600 புதுமைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

ஈரோடு, திண்டல், வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆர்.இலக்கியா, ஜி.வி.நித்யஸ்ரீ, ஜி.தீபிகாஸ்ரீ ஆகியோரின் புத்தாக்கமான ‘ஆகாயத்தாமரையை அகற்றும் படகு’ 1 பரிசையும், ரூ10000 ரொக்கப் பரிசையும், ‘கம்ப்ரஸ்டு கார்பன் டை ஆக்சைடு முறையில் சாயமிடுதல்’ ரூபாய் 5000 ரொக்கப் பரிசை பெற்றது. பள்ளி மாணவிகள் எஸ் யாழினி (10ம் வகுப்பு), சௌபர்னிகா, மதுஸ்ரீ (9ம் வகுப்பு) ஆகியோரின் நவீன விதைப்பு இயந்திரம் 5வது பரிசையும், ரூ.2000 பரிசையும் வென்றது. இவர்களை பள்ளியின் அறிவியல் ஆசிரியர்கள் வழிகாட்டினர். பள்ளி தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், முதல்வர் வி.லதா, நிர்வாக மேலாளர் வி.சென்னியப்பன் ஆகியோர் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img