fbpx
Homeபிற செய்திகள்வீரர்கள், வீராங்கனைகள் 618 பேருக்கு 30 வகையான விளையாட்டு உபகரணங்கள்அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

வீரர்கள், வீராங்கனைகள் 618 பேருக்கு 30 வகையான விளையாட்டு உபகரணங்கள்அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு நகர்ப்புற உள்ளாட்சிகளை சேர்ந்த 618 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு 30 வகையான விளையாட்டு உபகரணங்களை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கியதுடன், நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு சென்று விளையாட்டு உபகரணங்களை விநியோகிக்கும் வாகனத்தையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மாவட்ட விளையாட்டு அலுவலர் ரத்தினராஜ், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், வட்டச் செயலாளர் டென்சிங், மாவட்ட மருத்துவரணி தலைவர் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், பகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் அமைச்சர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதுடன்,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு, அவர்கள் விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளை புரிய தேவையான அனைத்து வித உதவிகளையும் செய்து வருவதாக தெரிவித்தார். இளம் வீரர் மற்றும் வீராங்கனைகள் விளையாட்டு துறையில் மென்மேலும் சிறந்து விளங்கி சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித்தர வேண்டும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img