fbpx
Homeபிற செய்திகள்கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்: திருவண்ணாமலை அருகே மருத்துவ முகாமினை துவக்கிய அமைச்சர் எ.வ.வேலு

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்: திருவண்ணாமலை அருகே மருத்துவ முகாமினை துவக்கிய அமைச்சர் எ.வ.வேலு

மக்களை காப்பதற்காக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை வட்டத்திற்குட்பட்ட கீழ்கச்சிராப்பட்டு ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தெபாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
இம்முகாமில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் கீழ்கச்சிராப்பட்டு ஊராட்சியில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, இன்றையதினம் நடைபெறுகிறது. 2000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த வள்ளுவப் பெருந்தகை கூறியது போல
“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தாரு போலக் கெடும்”- என்ற வள்ளுவனின் வாக்கின்படி முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து தவறான செயலை தவிர்த்து விட்டு வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு வட்டத்திற்கு மூன்று முகாம்கள் என்ற அடிப்படையில் முகாம்கள் நடைபெறுகிறது.

இந்த முகாமில் இரத்தம், சிறுநீர், சளி, கருப்பை புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்படுகிறது. நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திருவண்ணமலை மாவட்டத்தில் 2021 முதல் தற்பொழுது வரை 210 முகாம்கள் வாயிலாக 1 லட்சத்து 95 ஆயிரத்து 810 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

இந்த முகாமில் ரத்தம், சிறுநீர், சளி, கருப்பை புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்படுகிறது. நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருவண்ணமலை மாவட்டத்தில் 2021 முதல் தற்பொழுது வரை 210 முகாம்கள் வாயிலாக 1 லட்சத்து 95 ஆயிரத்து 810 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

அதனை தொடர்ந்து, நடைபெற்ற முகாமில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தலா ரூ.6000 என ரூ. 24 ஆயிரம் மதிப்பீட்டினை காசோலையினையும், 10 பயனாளிகளுக்கு தலா ரூ. 2000 என ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், அம்பா குழந்தை பராமரிப்பு பெட்டகம் 2 பயனாளிகளுக்கு ரூ.2000 மதிப்பீட்டில் தாய் சேய் நல பெட்டகத்திளையும், பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 9 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ. 4 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் கணிகண்ணாடிகளையும், மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ. 2 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் பருத்துவ பெட்டங்கள் எ பயனாளிகளுக்கு ரூ 53 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img