fbpx
Homeபிற செய்திகள்எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு காரமடை கிழக்கு ஒன்றியம் சார்பில் அன்னதானம்

எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு காரமடை கிழக்கு ஒன்றியம் சார்பில் அன்னதானம்

எம்.ஜி.ஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காரமடை கிழக்கு ஒன்றியம் ஆலங்கொம்பு பகுதியில்  காரமடை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜ்குமார்,ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் பிறந்த நாள் விழா நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட கழக செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் மேட்டுப்பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் திருஉருவ சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,பொதுமக்களுக்கு அன்னதானம்  வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சீலர் பி.டி.கந்தசாமி,ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன்,கோவை புறநகர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர்,சிக்கதாசம்பாளையம் பஞ்சாயத் தலைவர் மாலா,கிளை கழக செயலாளர் செல்வன்,குமார்,வினோத்,செல்வராஜ்,உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img