மேட்டுப்பாளையம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அன்னாஜிராவ் ரோடு பகுதியில் புதிய அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று மாவட்டச்செயலாளர் தொல்குடி.மைந்தன் தலைமையில் நடைபெற்றது.
கட்சியின் புதிய அலுவ லகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் உஞ்ஜையரசன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இரட்டைமலை சீனிவாசன், அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் திருவுருவப்படங்களும் திறந்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கோவை மண்டல செயலாளர் வை.குடியரசு,முன்னாள் மண்டல செயலாளர் சுசி.கலையரசன், மாவட்ட துணைச்செயலாளர் சக்கர வர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.