மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது இந்த ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லார் ரயில் நிலையம் வரை சமவெளியிலும் அங்கிருந்து குன்னூர் வரை பல்சக்கரம் பொருத்தப்பட்ட ரயில் பாதையிலும் நிலக்கரி மூலம் இயங்கும் நீராவி இன்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகி றது. அதேபோல் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் ரயில் டீசல் இன்ஜின் இயக்கப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையம் – குன்னூர் ரயில் பாதையில் ஏழு நீராவி எஞ்சின்களும் குன்னூரில் இருந்து ஊட்டி வரை ஐந்து டீசல் என்ஜின் களும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நிலக்கரி மூலம் இயங்கும் நீராவி ரெயில் என்ஜினில் கோளாறு நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் வெளிநாட்டு உதிரி பாகங்கள் கிடைக்காததால் மலை ரயில் சேவை அடிக்கடி பாதிக்கப்பட்டு வந்தது.
இதை கருத்தில் கொண்டு மேட்டுப் பாளையத்தில் இருந்து குன்னூருக்கு பர்னஸ் ஆயில் என்ஜின் மூலம் மலை ரயில் இயக்கப்பட்டு வந்தது இதனுடைய வெளிநாட்டில் நீராவி ரயில் என்ஜின் விலை உயர்வு மற்றும் உதிரிபாகங்கள் கிடைக்காததால் ரயில்வேத்துறை டீசல் மூலம் இயங்கும் நீராவி என்ஜினை தயாரிக்க திட்டமிடப்பட்டது.
இதை அடுத்து திருச்சி பொன் மலை ரயில்வே பணிமனையில் முதல் முறையாக நிலக்கரி மூலம் இயங்கும் டீசல் நீராவி ரயில் இன்ஜின் தயாரிக்கப்பட்டது. இந்த என்ஜின் மூன்று மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் கொண்டுவரப்பட்டு இரண்டு கிரேன்கள் உதவியுடன் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள மலை ரயில் பாதையில் பத்திரமாக இறக்கி வைக்கப்பட்டது.
டீசல் நீராவி ரயில் இன்ஜின்
இந்த நிலையில் இன்று தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் புதிய டீசல் நீராவி ரயில் இன்ஜினை கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை புதிய டீசல் இன்ஜினில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வின்போது சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் கௌதம் சீனிவாச ராவ் மற்றும் ரயில்வே அதிகாரிகள் ரயில்வே ஊழியர்கள் உடன் இருந்தனர்.
முன்னதாக மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ரயில் நிலைய வளாகத்தில் பிரேக்ஸ் மேன்களுக்காக கட்டபட்ட புதிய ஓய்வு அறையை நேரில் பார்வையிட்டு திறந்து வைத்தார். மேலும்,மேட்டுப்பாளையம் – கோவை பயணிகள் ரயில் இயங்கும் தடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தென்னக ரயில்வே பொது மேலாளர் ஏற்கனவே உதகைக்கு இயக்கப்பட்டு வரும் மலை ரயிலோடு உதகைக்கு சிறப்பு மலை ரயிலை சுற்றுலா பயணிகள் வசதிக்காக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட் டங்களுக்கு செல்லும் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகத்துடன் பேசி வருவதாகவும், விரைவில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.