fbpx
Homeபிற செய்திகள்நவீன பட்டு நெசவு உற்பத்தி நிலையம் திறப்புவிழா

நவீன பட்டு நெசவு உற்பத்தி நிலையம் திறப்புவிழா

அன்னூர் கைகாட்டியில் டாடா நிறுவனம் சார்பில் “வீவர்ஷாலா” என்ற நவீன தொழில்நுட்பபட்டு நெசவு உற்பத்தி நிலையம் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று (8 -ந்தேதி) நடைபெற்றது

விழாவில் டைட்டன் கம்பெனி நிர்வாக இயக்குனர் சி. கே..வெங்கடராமன், தநைராவின் தலைமை நிர்வாக அலுவலர் அம்புஜ் நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய நவீன தொழில்நுட்ப பட்டு உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்தனர்.

விழாவில் மகிஸ்சில்க்ஸ் ஏஜென்ஸின் உரிமையாளர் ஆர். மல்லிகார்ஜூன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து டைட்டன் கம்பெனி நிர்வாக இயக்குனர் சி.கே.வெங்கடராமன், தநைரா தலைமை நிர்வாக அலுவலர் அம்புஜ் நாராயணன், மகிஸ்சில்க்ஸ் ஆர். மல்லிகார்ஜூன், ரமேஷ் ஆகியோர் கூறியதாவது:-

விற்பனையகங்கள்

டாடா குழும நிறுவனமான டைட்டனில் இருந்து வெளியாகும் பெண்களுக்கான ஆடைகள் பிராண்டான தநைரா 2017 ல் தொடங்கப்பட்டது. தற்போது 19 நகரங்களில் 38 விற்பனையகங்களை கொண்டுள்ளது.

டாடா தயாரிப்பான தநைரா உ.பி.யில் வாரணாசியில் 2 வீவர் ஷாலாவும், சட்டீஸ்கர் சம்பாவில் ஒரு வீவர்ஷாலாவும் தொடங்கப்பட்டதை தொடர்ந்து 4-வது கிளையாக கோவையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கோவையை சேர்ந்த மகிஸ்சில்க்ஸ் ஏஜென்ஸியுடன் இணைந்து நவீன தொழில்நுட்ப பட்டு சேலை உற்பத்தி “வீவர்ஷாலா”வை தொடங்கி உள்ளோம். கோவை சத்தி ரோட்டில் தநைராஷோரூம் தொடங்கப்பட்டு உள்ளது.
மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img