fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் கிராமத்தில் 3 காட்டு யானைகள் உலா

மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் கிராமத்தில் 3 காட்டு யானைகள் உலா

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரத்திற்குட்பட்ட நெல்லிமலை அடிவாரத்தில் குரும்பூர், சமயபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

இதனிடையே வனப்பகுதியில் இருந்து காட்டுயானை, காட்டுப் பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உணவு குடிநீர் தேடி குடியிருப்பு, விளை நிலங்களில் நுழைந்து பொதுமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.

இதில் வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை பாகுபலி நடமாட் டம் இருந்து வந்த நிலையில் தற் போது கூடுதலாக 3 காட்டுயானைகள் நடமாடி வருகின்றன.

குறிப்பாக அதிகாலை நேரத்திலும் மாலை நேரத்திலும் சமயபுரம் கிராமத்தில் உள்ள கிராம சாலையை கடந்து செல்கிறது. இன்று காலை சமயபுரம் கிராம சாலை வழியாக மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் சாலையை மூன்று காட்டு யானைகள் கடந்தது . இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து தங் கள் வீடுகளை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்து கொண்டனர்.

இப்பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் காட்டு யானை அடிக்கடி ஊருக்குள் வருவது அந்த பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே அந்த யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img