fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் பிரசார கூட்டத்தில் ஆ.ராசா பேச்சு

மேட்டுப்பாளையம் பிரசார கூட்டத்தில் ஆ.ராசா பேச்சு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கிழக்கு ஒன்றிய கிராமப்புறங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பிரசார வாகனத்தில் இருந்தபடி மக்களிடையே அவர் பேசியதாவது:

“இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என ஸ்டாலின் அழைக்கிறார். ஏனென்றால் குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல இந்தியா மோடி கையில் சிக்கியுள்ளது. ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் செலுத்தப்படும், ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, நாட்டில் உள்ள நதிகள் இணைப்பு என கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மதவெறியை பரப்பி அரசியல் செய்து வருகிறார்.

மீண்டும் மோடி வெற்றி பெற்றால் அரசியல் சாசனம் நீக்கப்பட்டு பாகிஸ்தானை போல் அதிபர் ஆட்சி முறை இங்கு கொண்டு வரப்படும். இதுவே இந்தியாவில் நடைபெறும் கடைசி தேர்தலாக இருக்கும். எனவே நாட்டை காக்க திமுக கூட்ட ணிக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினர் அஷ்ரப் அலி, மேற்கு ஒன்றிய செயலா ளர் சுரேந்திரன், கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு, அவைத்தலைவர் புருஷோத்மன், ரமேஷ், வழக்கறிஞர் சந்தானம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img