fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாட்டுக்கு முதலிடம் - ஸ்டாலினுக்கு வெற்றி மகுடம்!

தமிழ்நாட்டுக்கு முதலிடம் – ஸ்டாலினுக்கு வெற்றி மகுடம்!

பொதுவான ஏற்றுமதிகள், பொறியியல் சார்ந்த ஏற்றுமதிகள், கர்ப்பிணி பெண்கள் சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான பாராட்டு பத்திரம் வழங்கி இருக்கிறது.

மகப்பேற்றுக்கு பின் கவனிப்பு, கணினி பொருட்கள் ஏற்றுமதி, இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய 7 பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த அறிக்கைகள் ஒன்றிய அரசு நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் தமிழ்நாடு மாநிலமே சிறந்து விளங்குவதாக அந்த அறிக்கைகளும் வரைபடங்களும் தெளிவுபடுத்துகின்றன.

ஏற்றுமதி ஆயத்த நிலைக்கான 2022ம் ஆண்டின் குறியீடுகள் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. இதில் 80 முதல் 100 மதிப்பெண்கள் வரை பெற்று தமிழ்நாடே முதலிடம் பெற்றுள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது.

பொறியியல் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு குறித்த 2022&-23ம் ஆண்டின் அறிக்கையை ஒன்றிய அரசின் தேசிய நிர்யாத் வெளியிட்டுள்ளது. இந்திய நாடு முழுவதும் செய்துள்ள ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 16.30 சதவீத பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் மராட்டிய மாநிலத்தை அடுத்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.

கர்ப்பிணி பெண்கள் சுகாதாரம் தேசிய ஏழ்மை குறியீடுகள் குறித்த 2023ம் ஆண்டுக்கான அறிக்கையில், கர்ப்பிணி பெண்கள் சுகாதார குறியீடுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கர்ப்பிணி பெண்கள் பராமரிப்புடன் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு 3.31 புள்ளிகளை பெற்று இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் மகப்பேறுகள் ஆண்டு வாரி சுகாதார ஆய்வு மக்கள்தொகை ஆணையர் மற்றும் தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் முக்கிய புள்ளியியல் பிரிவு ஆய்வுகளின்படி நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் மருத்துவமனைகளில் பாதுகாப்புடன் நடைபெறக்கூடியது தமிழ்நாட்டில் தான் அதிகம். அதாவது 99 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் நடைபெறுகின்றன என்று தமிழ்நாடு வெகுவாக பாராட்டப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த பின் சிசு கவனிப்பில் அனைத்து வசதிகளுடனும் குழந்தைகளை பராமரித்து காப்பதிலும் தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது.

மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான சமூக முன்னேற்ற குறியீடுகள் பற்றிய ஆய்வில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 89.9 சதவீதங்களை பெற்று முன்னணி மாநிலமாக திகழ்வதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொழில் வளர்ச்சி முதலான பிரிவுகளில் மாநிலங்களை முன்னேற்றுவதில் பெரிதும் துணைபுரிவது சிறப்பு பொருளாதார மண்ட லங்கள். இதில் தமிழ்நாடு மாநிலம்தான் அதிக அளவில் 50 சிறப்பு பொருளாதார மண்டலங்களை பெருக்கி இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. இதனை ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச் சகம் தெளிவுப்படுத்தி உள்ளது.

இப்படி, தமிழ்நாடு எதிலும் முதலிடத்தைப் பெற்று வளர்ச்சியை எய்தியுள்ளதற்கு ஒன்றிய அரசின் ஆவணங்களே சாட்சியாக இருப்பது தான் தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் பெருமை தருகிறது. தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப் பேற்ற காலக்கட்டத்தில் நான் முதலிடத் திற்கு வரவேண்டியது முக்கியமல்ல, தமிழ்நாடு முதலிடம் பெறுவது தான் எனக்குப் பெருமை என அடிக்கடி முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது
நினைவிருக்கலாம். அதனைச் செய்து காட்டியி ருக்கிறார். அதுவும் திமுக அரசைக் கடுமையாக விமர்சித்து வரும் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தான், தமிழ்நாட்டுக்கே முதலிடம்... முதலிடம் என்று வரிசையாக சான்றளித்து வருகிறது. தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலை மையில் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதை விட வேறு யாரும் கட்டியம் கூற தேவை இல்லை.

திராவிட மாடல் ஆட்சியால் தமிழ்நாட்டிற்கு கிடைத்து வரும் முதலிடம் தொடரும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு காரணகர்த்தாவான மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டு மக்கள் இன்னொரு வெற்றி மகுடம் சூட்டத் தயாராகி விட்டார்கள் என்பதிலும் சந்தேகமில்லை!

படிக்க வேண்டும்

spot_img