மேட்டுப்பாளையம் பிளாக் தண்டர் தீம் பார்க் பொழுது போக்கு பூங்கா தொழிலில் பல ஆண்டுகளாக நிலைத்து நின்று, விருந்தினர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை அளிப்பதில் தலைசிறந்த நிறுவனம் ஆகும்.
நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வில் செயல் இயக்குனர் வின்சென்ட் அடைக்கலராஜ் புதியதாக மூன்று புதிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்தினார். இவை மூன்றும் மக்களுக்கு மிகச் சிறந்த சிலிர்ப்பை தரும் விதமாக அமைந்துள்ளது.
இந்தக் கூடுதல் சிறப்புகள் வாடிக்கையாளர்களுக்கு வயது வரம்பு வித்தியாசமின்றி சிலிர்ப் பையும் உற்சாகத்தையும் தரும் என்று கூறினார். தமது வாடிக்கையாளர்களுக்கு மனம் நிறைந்த மகிழ்வையும் உற்சாகத்தையும் தர வேண்டும் என்ற நோக்கத்திற்கு இந்த மூன்று சவாரிகளும் சிறப்பை தரும் என்று உறுதியளித்தார்.
மேலும் இந்த ஆண்டு கோடை விழாவில் 100 விதமான இயற்கை பூக்கள் மற்றும் எல் இ டி மின்சார விளக்குகளால் புதுமையான ஒரு மலர் கண்காட்சியை அளிக்க இருப்ப தாகவும் தெரிவித்தார்.
Glow Garden: பொழுது போக்கு பூங்கா தொழிலில் நாட்டின் முதன் முதலாக அறிமுகப்படுத்த இருக்கும் குளோ கார்டன் நூறு விதமான இயற்கை மலர்கள் மற்றும் எல் இ டி மின்சார வரங்களை உருவாக்கப்பட உள்ளது.
மேலும் இது பூங்காவின் நுழைவு வாயில் பகுதியில் அமைந்திருக்கும் வாட்டர் பவுண்டன் அருகில் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது. கூடுத லாக 10 மீட்டர் உயரம், 10 மீட்டர் அகலம் கொண்ட இரண்டு மிகப்பெரிய ஒளிரும் மரங்களை உருவாக்கியுள்ளது. இந்த மரத்தினை 16 மில்லியன் வண்ணங்களில் ஓளிர செய்யும் விதமான தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
Slam Bob: இந்த அமைப்பு உற்சாகத்தின் எல்லைகளை தொடுவதோடு அட்ரினல் சுரப்பை மிக அதிக அளவில் சுரக்க வைக்கும் அளவிற்கு போதுமானவற்றை இணைத்து இதை வடிவமைத்துள்ளது. மிகத் துல்லியமான பாதுகாப்பு அம்சங்களுடன் வேறு எங்கும் கிடைக்காத மிக சிறந்த அனுப வத்தை தரும் விதமாக இது அமைக்கப்பட்டுள்ளது.
Junior Carausal: குழந்தைகளுக்கு என்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இது குழந்தைகளுக்கு சிறந்த குதூகலத்தை தரும் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நினைத்து நினைத்து மகிழும் வண்ணமாக மகிழ்ச்சியையும் அதிசயத்தையும் ஒன்றிணைந்து வழங்குவதாக அமைக்கப்பட்டுள்ள இது இன் னும் பல தலைமுறைகளுக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக திகழும்.
Crazy cups : டீ கோப்பைகளில் உட்காருவதை போல் வடிவமைக்கப்பட்ட இந்த பொழுதுபோக்கு அமைப்பு ஒவ்வொரு கோப்பைகளும் தனித்தனியாக சுழலும் தன்மை கொண்டது. 32 நபர்கள் வரையிலும் பங்கேற்றுக் கொள்ள முடியும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கோப்பையும் தனித்தனியாக சுழல்வதோடு மத்தியில் இருக்கும் மேடையையும் சுற்றும் விதமாக இருக்கும் இந்த விளையாட்டு குடும்பத்தார் அனைவருக்கும் மிகச் சிறந்த மகிழ்ச்சியை தரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.



