fbpx
Homeபிற செய்திகள்மலிவு விலையில் தரமான நகைகள் மெலோராவின் அட்சய திருதியை சலுகை

மலிவு விலையில் தரமான நகைகள் மெலோராவின் அட்சய திருதியை சலுகை

இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் டி2சி (வாடிக்கையாளருக்கு நேரடியாக விற்பனை செய்யும்) பிராண்டுகளில் ஒன்றான மெலோரா (Melorra) அட்சய திருதியை வரிசையை வெளியிட உள்ளது.

மெலோராவின் தனித்துவ வடிவமைப்பு நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட 350-க்கும் மேற்பட்ட தங்கம் – வைர நகைகள் மிகப்பெரியதாகத் தோன்றினாலும், எடை குறைந்ததாகவும் விலை குறைவானதாகவும் இருக்கும்.

அன்றாடப் பயன்பாட்டுக்கான இலகுரக நகைகளில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் மெலோரா. பெண்களுக்கான 16000+ டிசைன்களையும் ஆண்களுக்கான 100+ டிசைன்களையும் இது வழங்குகிறது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 75 புதிய ஸ்டைல்களில் வடிவமைக்கப்பட்ட நகைகளை இந்த பிராண்ட் அறிமுகப்படுத்துகிறது. இந்த நிறுவனத்தில் ரூ.3,000 என்கிற விலையிலிருந்து நகைகள் கிடைக்கும். இந்த வரிசையின் 70% நகைகள் ரூ. 50,000க்கும் குறைவாக இருக்கிறது.

சமீபத்திய போக்குகள் மற்றும் பாணிகளை உள்ளடக்கி பி.ஐ.எஸ். ஹால்மார்க் அங்கீகாரம் பெற்ற தங்கம் மற்றும் சான்றளிக்கப்பட்ட வைர நகைகளை வழங்கும் மிகவும் மலிவான நகை பிராண்டுகளில் ஒன்று மெலோரா.

புதிய வரிசையின் அறிமுகம் குறித்து மெலோராவின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சரோஜா யெர்ரமில்லி கூறியதாவது:

அட்சய திருதியை என்பது செல்வத்துக்கான கடவுளின் அடையாளமாக தங்கத்தை வாங்குவதற்கு குடும்பங்கள் எதிர்நோக்கும் ஒரு நாளாகும்.

அட்சய திருதியைக்காக 5 நவநாகரிக வரிசைகள், 350+ தங்கம் மற்றும் வைர நகைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். மலிவு விலையிலும் தரம், தூய்மையுடன் கூடிய நகைகளை வழங்குகிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img