fbpx
Homeபிற செய்திகள்மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் குமராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாற்று திறன் கொண்ட மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதற்கு குமராட்சி வட்டார வள மையம் மேற்பார்வையாளர் இளவரசன் மற்றும் பரங்கிப்பேட்டை வட்டார வளமையும் மேற்பார்வையாளர் காயத்ரி தலைமை தாங்கினர்.

வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி, லட்சுமி, கோமதி முகாமை தொடங்கி வைத்தனர்.

முகாமில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சார்ந்த மருத்துவக் குழு கலந்துகொண்டு 150-க்கும் மேற்பட்ட மாணவர்களின் குறைகளை கண்டறிந்து சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மாவட்ட மாற்றுத்திறன் நலத்துறை சார்பில் தேசிய அடையாள அட்டை பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

முகாமில் குமராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தைச் சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர்கள் இயன் முறை மருத்துவர்கள் சிறப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

முகாமிற்கான அடிப்படை வசதிகளை மருத்துவ குழு ஒருங்கிணைப்பாளர் லதா ஏற்பாடு செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img