தமிழ்நாடு அரசின் ‘கிராமம்தோறும் புத்தொழில்‘ திட்டத்தின் கீழ் உள்ளூரில் கிடைக்கும் வளங்களைக் கொண்டு சிறு, குறு தொழில் தொடங்குவதற்கு ஈரோடு மாவட்டத்தில் முதல் கிராமமாக தாளவாடி வட்டத்துக்குள்பட்ட ஆசனூர் கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆசனூரில் ரீடு அலுவலகத்தில் நடைபெற்ற ‘கிராமம்தோறும் புத்தொழில்‘ தொடக்க விழாவுக்கு ரீடு இயக்குநர் கருப்புச்சாமி தலைமை வகித்தார். திட்ட மேலாளர் பழனிச்சாமி வரவேற்றார்.
கிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம்பாட்டில் ‘கிராமம் தோறும் புத்தொழில்‘ திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் அலுவலர் குருசங்கர், திட்ட ஒருகிணைப்பாளர் கோபிநாத் ஆகியோர் பேசும்போது, கிராமப்புற மக்களை இலக்காகக் கொண்ட ஒரு முழுமையான வாழ்வாதார மேம்பாட்டு திட்ட மாகும்.
இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கு வாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூர் வளங்களை அடிப்படையாகக் கொண்டு சிறு, குறு மற்றும் புத்தொழில்கள் தொடங்குவதற்கு இத்திட்டத்தின் மூலமாக வாய்ப்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன என்றனர். திட்ட அலுவலர் சரவணகுமார் நன்றி கூறினார்.



