நாமக்கல் மாவட்டத்தில் மே 12ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தினை நாமக்கல் மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி தலைமை தாங்கி நடத்தினார்.
இதில் கழக வளர்ச்சி குறித்தும் கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் அவர்களின் பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா, நாமக்கல் முன் னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநகர செயலாள ருமான கே.பி.பி. பாஸ்கர், பரமத்தி சட்டமன்ற உறுப்பினர் சேகர் மற்றும் மாநில, மாவட்ட கழக பொறுப்பாளர்கள், ஒன்றிய, மாநகர, பேரூர் கழக பொறுப்பாளர்கள், வார்டு கழக செயலாளர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.