fbpx
Homeபிற செய்திகள்உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மேக்ஸ்வெல்லின் பொன் மகள் விழா

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மேக்ஸ்வெல்லின் பொன் மகள் விழா

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மேக்ஸ்வெல் அறக்கட் டளை மூலமாக ஆண்டு தோறும் நடைபெறும் பொன்மகள் விழா பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆடிட் டோரியத்தில் நடை பெற்றது.

இவ்விழாவில் 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கும், மாணவிக ளுக்கும், மலைவாழ் மக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. குறிப் பாக தாய், தந்தை இருவ ரையும் இழந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை ரூ.1 லட்சம் வரை வழங்கப்பட்டது. மேலும் பெண்களுக்கு தொழில் தொடங்க தையல் மெஷின், மாற்றுத் திறனாளிகளுக்கு வீல் சேர் வழங்கப்பட்டது. மாணவிகளுக்கு ஸ்கூல் பேக் உட்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

பெண் தூய்மை பணியாளர்கள் 30 பேருக்கு மூன்று மாதத்திற்கு தேவையான அரிசி மளிகை பொருள் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு துறைகளில் சாதித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு பொன் மகள் விருதுகளும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட உதவி வன பாதுகாவலர் சௌமியா, கல்லூரி முதல் வர் முனைவர் விஜயா, திரைப்பட நடிகை காவியா அறிவுமணி, பின்னணி பாடகி ரிஹானா, அருணாலயம் அறக்கட்டளை முனைவர் அருணா, கீர்த்தி அறக்கட்டளை உஷா ரமேஷ், சாத்விக் கன்சல்டன்ஸ் சிவகுமார், மேக்ஸ்வெல் அறக்கட் டளை கமிட்டி உறுப்பி னர்கள் ஜெய்ஜாலன், ஜமீர் அகமது, மகேஸ்வரி, சத்யா மற்றும் வனப் பாதுகாவலர் சௌமியா, சத்விக் கன்சல்டண்ட்ஸ் காவ்யா அறிவுமணி, ஜெய்ஜலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img