மெட்ராஸ் ரெஜிமென்ட் டின் இராணுவ தலைமை அதிகாரி (கர்னல் ஆப்தி மெட்ராஸ் ரெஜிமென்ட்) லெப்டினன்ட் ஜென்ரல் மஞ் சிந்தர் சிங், ஒய்.எஸ்.எம்., வி.எஸ்.எம், சிம்லாவைத் தலைமையிடமாககொண்ட இராணுவப் பயிற்சிக் தலைமையகத்தின் 24வது ஜெனரல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
இவர் சைனிக் பள்ளி கபுர்தலா, தேசிய பாதுகாப்பு அகாடமி, கடக் வாஸ்லா மற்றும் இந்திய இராணுவ அகாடமி, டேரா டூனில் பயிற்சி பெற்றார். இவர் 20 டிசம்பர் 1986 அன்று 19 மெட்ராஸ் படையில் இரண்டாவது லெப்டினன்ட் அதிகாரி யாக தனது இராணுவ வாழ்க்கையைத் துவங்கினார்.
ஜென்ரல் அதிகாரி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் ஜம்மு மற்றும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளில் மிகுந்த திறமையைக் காட்டினார். அவரது தைரியமும் தலை மைத்துவ குணங்களும் மற்றும் தேசத்திற்காக அவர் add ஆற்றிய கடமைகளுக்காகவும் அவருக்கு 2015 இல் யுத் சேவா பதக்கமும் மற்றும் 2019 இல் விஷிஷ்ட் சேவா பதக்கமும் இந்திய இராணுவத்தால் கௌரவிக்கபட்டார்.
01 ஜனவரி 2021 முதல் மெட்ராஸ் ரெஜி மென்ட்டின் தலைமை அதி காரியாகவும் (கர்னல் ஆப்தி மெட்ராஸ் ரெஜிமென்ட்) நியமிக்கப்பட்டார். அவர் படைப்பிரிவின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டு நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் பயிற்சி நிலையத்தின் தரத்தினையும் மற்றும் நிர்வாகத் தேவைகளளை உயர்த்தியுள்ளார்.
இராணுவப் பயிற்சி தலைமையகத்தின் தலைமை அதிகாரியாகப் பதவியேற்றுக்கொண்ட ஜெனரல் அதிகாரி, மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.



