fbpx
Homeபிற செய்திகள்மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, தேனியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, தேனியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், கைலாசப்பட்டி ஜீவன் ஜோதி மையத்தில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:

உலக எய்ட்ஸ் தினமானது, எச்.ஐ.வி/எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் புதிய கருத்துகளை மையமாக வைத்து கடைபிடிக்கப்படுகிறது. இந்த வருடம் “சமூகங்களுடன் சேர்ந்து எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றினை குறைக்கும் செயலை முன்னெடுப்போம்‘’ என்ற கருத்தினை மையமாக கொண்டு உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த மையக்கருத்தினை சிறப்பாக செயல்படுத்துவதன் மூலம் குறிப் பாக எச்.ஐ.வி தொற்றினால் ஏற்படும் ஏற்றதாழ்வுகளை நிவர்த்தி செய்து சமப்படுத்தும் பாங்கினையும் மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவலை குறைப்பதையும் உறுதி செய்வோம்.
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது.

எச்.ஐ.வி எய்ட்ஸ் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்கள் தொண்டு நிறு வனங்கள் மற்றும் நடமாடும் நம்பிக்கை மைய வாகனத்தின் வாயிலாக மக்கள் மத்தியில் விநியோகம் செய்யப்படுகிறது. நிரந்தரமாக எச்.ஐ.வி எய்ட்ஸ் பற்றிய சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்காக இலவச தொலைபேசி எண் 1800 419 1800, எச்.ஐ.வி எய்ட்ஸ் தடுப்பு சம் மந்தமான விபரங்களை அறிய “ஐயம் தவிர்” என்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேசனும் பயன்பாட்டில் உள்ளது.

நமது மாவட்டத்தில் எச்.ஐ.வி /எய்ட்ஸ் தடுப்பு பணியில் 16 நம்பிக்கை மையங்களும், 35 துணை நம்பிக்கை மையங்களும், 2 ஏ.ஆர்.டி கூட்டு மருத்துவ சிகிக்சை மையமும், 8 துணை ஏ.ஆர்.டி மையங்களும் மற்றும் 1 நடமாடும் நம்பிக்கை மையமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் எச்.ஐ.வி எய்ட்ஸின் பாதிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கின்ற பால்வினை தொற் றினை தடுக்கும் விதமாக மாவட் டத்தில் 16 சுகவாழ்வு மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனோடு இரத்த பரிமாற்றம் மூலம் பரவுதலை தடுப்பதற்காக மூன்று குருதி மையங்களும், செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உலக எய்ட்ஸ் தின அனுசரிப் பில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களை சமூகத் தில் ஒதுக்கி வைக்காமல், அவர் களை அரவணைத்து, அவர்க ளுடனும் சமமாக பழக வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மூலம் எச்.ஐ.வி தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் கார ணமாக உலக அளவில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும், பொதுமக்களிடம் கூடுதல் விழிப்பு ணர்வு ஏற்படுத்தி, எச்.ஐ.வி தொற்று இல்லா சமூ கத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு ஆர்.வி.ஷஜீவனா கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவைர் தலைமையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வும், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. அத னைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அனைவருடன் அமர்ந்து, சமபந்தி உணவில் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வில், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) திரு. ரமேஷ்பாபு, துணை இயக்குநர் (காசநோய் பிரிவு) திரு.ராஜபிரகாஷ், மாவட்ட திட்ட மேலாளர் (எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு) திரு.முகமது பாரூக், மேற்பார்வை யாளர் திரு.வைரவன், குழந் தைகள் நலக்குழுத்தலைவர் திருமதிவனஜா, அருட்சகோதரிகள் அன்ஸ் தாசியா, பிரேமா, எச்.ஐ.வி. கூட்டமைப்பு தலைவர் திரு.பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img