fbpx
Homeபிற செய்திகள்நாகர்கோவில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் சார்பில் பள்ளிக்கு ரூ.7 லட்சத்தில் கல்வி உபகரணங்கள் வழங்கல்

நாகர்கோவில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் சார்பில் பள்ளிக்கு ரூ.7 லட்சத்தில் கல்வி உபகரணங்கள் வழங்கல்

நாகர்கோவில் மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் சார்பில் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) நிகழ்ச்சி திசையன்விளை ஹோலி ரெடீமர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டப் பேரவைத் தலைவர் எம்.அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மலபார் குழுமம் சார்பில் சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் ஹோலி ரெடீமர் பள்ளிக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் 100 மேஜை, 100 நாற்காலிகள் ஆகியவற்றை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஸ், திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி, திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலர் தயாபதி நெலதம், ஹோலி ரெடீமர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அந்தோணி டக்ளஸ், தலைமை ஆசிரியை மேரி பிரீடா, மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நாகர்கோவில் கிளை தலைவர் ரினீத், வர்த்தக மேலாளர் துவாரகாநாத் ஆகியோர் உடனிருந்தனர்.

மலபார் கோல்டு அண்டு டைமண்டஸ் நிறுவனம், தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மகளிரை அதிகாரமயமாக்குதல் ஆகிய சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img