fbpx
Homeபிற செய்திகள்ஆதரவற்றோர்களை உற்சாகப்படுத்த மெட்ராஸ் ராயல் கிளப் பொழுதுபோக்கு நிகழ்ச்சி

ஆதரவற்றோர்களை உற்சாகப்படுத்த மெட்ராஸ் ராயல் கிளப் பொழுதுபோக்கு நிகழ்ச்சி

கடந்த 2015ம் ஆண்டு துவக்கப்பட்ட மெட்ராஸ் ராயல் கிளப், சமீபத்தில் சென்னையில் உள்ள பல்வேறு ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாற் றுத்திறனாளிகள் ஆதரவு மையங்களைச்சேர்ந்த 700க்கும் மேற்பட்ட தனிநபர்களை மகிழ்ச்சிப் படுத்தும் வகையில் பொழு துபோக்கு நிகழ்ச் சியை ஏற்பாடு செய்திருந்தது.

தீப்சந்த் (பப்பு சா) லுனியா, ராஜஸ்தான் ரத்னாவின் சுபாஷ் ரங்கா, நிர்மல் மர்லேச்சா, அனில் சிங்கி மற்றும் சோஜாத் ரோடு பிரவாசி ஜெயின் சங்கம் உள்ளிட்ட கிளப்பின் உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியில், கிளப்பின் தலைவர் டாக்டர் நிர்மல் நஹ்தா தலைமையில், செயலாளர் ரத்தன் கட்டாரியா, பொருளாளர் ரமேஷ் தர்தா, மகளிர் பிரிவின் தலைவி மற்றும் நிகழ்வுத் தலைவர் பூனம் சாஜேத், இணைத் தலைவர் சந்தோஷ் பூன்மியா, இளைஞர் பிரிவின் தலைவர் ஹர்ஷ் பாபெல் மற்றும் இணைத் தலைவர் குஷி நஹ்தா ஆகியோருடன் இணைந்து வெற்றிகரமாக நடைபெற்றது.

மெட்ராஸ் ராயல் கிளப்பின் தலைவர் டாக்டர் நிர்மல் நஹ்தா கூறுகையில், இந்த நபர்க ளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி யையும் பொழுதுபோக் கையும் கொண்டு வர முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,
இந்த நிகழ்வு, நலிந்தவர்களுக்கு சேவை செய்வதற்கும், நமது சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் எங்கள் கிளப்பின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img