இந்தியாவில் பெண்கள் சிறு நீரகவியல் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவு சார்பில், 4வது ஆண்டாக வினிகான்-2025 மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாநாட்டை உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி மற்றும் எம்எஸ்எஸ்ஆர்எப் தலைவருமான டாக்டர் சௌமியா சுவாமிநாதன், இந்திய சிறுநீரகவியல் சங்கச் செயலாளர் டாக்டர் ஷியாம் பன்சால், இந்திய உறுப்பு மாற்று சங்கத் தலைவர் டாக்டர் அர்பிதா ரே சௌத்ரி மற்றும் சிறுநீரக வாரியர்ஸ் நிறுவனர் வசுந்தரா ராகவன் ஆகியோர் தொடங்கி வைத்து வின்ஸ்பையர் மலரையும் வெளியிட்டனர்.
இந்த 2 நாள் மாநாட்டில் இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்து 300க்கும் மேற் பட்ட சிறுநீரக மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர் கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டை துவக்கி வைத்து டாக்டர் சௌமியா சுவாமிநாதன் பேசுகையில், வினிகான்&2025 என்பது வெறும் அறிவியல் சம்பந்தமான சந்திப்பு மாநாடு மட்டுமல்ல. இது அதிகாரமளித்தல் மற்றும் மாற்றத்திற்கான ஒரு தளமாகும். என்று தெரிவித்தார்.
இந்திய சிறுநீரகவியல் சங்கத் தின் செயலாளர் டாக்டர் ஷியாம் பன்சால் கூறுகையில், இந்திய சிறுநீரகவியல் சங்கம் வினிகான் 2025 மாநாட்டை ஆதரிப்பதில் பெருமை கொள்கிறது. பெண் சிறுநீரகவியல் நிபுணர்கள் எங்கள் துறையை முன்னேற்றுவதில் முன்னணியில் உள்ளனர் என்று தெரிவித்தார்.
வின் இந்தியா தலைவர் டாக்டர் மனிஷா சஹாய் பேசுகை யில், மூன்று ஆண்டுகளில், நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட பெண் சிறுநீரக மருத்துவர்களை வின் இந்தியா ஒன்றிணைத்துள்ளது என்றார்.
வின் இந்தியா செயலாளர் டாக்டர் ஸ்வர்ணலதா குடிதி கூறுகையில், இந்த ஆண்டு, எங்கள் குழுவில் 50 புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர், இது எங்களின் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் உள் ளது என்றார். வினிகான் 2025 ஒருங்கி ணைப்புத் தலைவர் டாக்டர் ஜெயலட்சுமி சேஷாத்ரி பேசுகையில், ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை கைகோர்த்துச் செல்லும்போது சிறுநீரக ஆரோக்கியத்தில் முன் னேற்றம் ஏற்படும் என்பதை இந்த மாநாடு நமக்கு நினைவூட்டியது என்றார்.
வினிகான்&2025 அமைப்புச் செயலாளர் டாக்டர் ரஞ்சனி முத்து பேசுகையில், வினிகான்& 2025 ஒரு வளமான கல்வி விருந்து மற்றும் பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்வதற்கான சிறப் பான ஒன்றாக இருந்தது என்று தெரிவித்தார்.



