சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 65-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சோனா கல்விக் குழுமங்களின் தலைவர் சொ.வள்ளியப்பா விழாவிற்கு தலைமையேற்றார். திரிவேணி எர்த்மூவர்ஸ் மற்றும் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் பி.கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முதல் ஐந்து இடங்களைப் பெற்ற 60 மாணவ மாணவியர் உட்பட 681 மாணவ, மாணவியர்களுக்கு பட்டயச் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கல்லூரியின் முதல்வர் கனகராஜ் தமது உரையில், மாணவ, மாணவிகளுக்கு வருடத்திற்கு 8.5 லட்சம் ஊதியம் பெறும் வகையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கல்லூரியின் தலைவர் சொ.வள்ளியப்பா பட்டமளிப்பு விழாவின் தலைமையுரையில், இக்கல்லூரி 67 வருடங்களாக சிறப்பான கல்வியை வழங்கி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கல்லூரியின் துணைத்தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா மற்றும் தியாகு வள்ளியப்பா ஆகியோர் புதுமையான திட்டங்களை ஸ்டார்ட்-அப்ஸ் மூலமாக புதிய தொழில் நிறுவனங்களாக செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து வாழ்த்தினர்.
கல்லூரியின், இயக்குனர் கார்த்திகேயன் காப்புரிமை பெறுதல், ஆராய்ச்சி ஆகியவற்றில் அனைத்து கல்லூரிகளுக்கும் முன்னோடியாக திகழ்கின்றது என தெரிவித்தார்.
இப்பட்டமளிப்பு விழாவில் 791 மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருடன் வருகை புரிந்து பட்டயச் சான்றிதழ்களைப் பெற்றனர்.



