கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில், ஆலப்பட்டி உள்வட்டத்திற்குட்பட்ட, சிக்கபூவத்தி, தண்டேகவுண்டன அள்ளி, பெல்லம்பள்ளி தொகுதி, ஜிஞ்சுப்பள்ளி தொகுதி, கொம்பள்ளி, கூளியம் தொகுதி, செம்படமுத்தூர் ஆகிய 7 தொகுதிகளில் உள்ள 12 கிராமங்களுக்கான ஜமாபந்தி மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் தலைமையில் மூன்றாவது நாளாக நேற்று நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 16ம் தேதி அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. 16 மற்றும் 20ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சியில், வேப்பனப்பள்ளி மற்றும் ஆலப்பட்டி ஆகிய உள்வட்டங்களுக்குட்பட்ட 49 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
மூன்றாவது நாளாக நேற்று (21.05.2025) ஆலப்பட்டி உள்வட்டத்திற்குட்பட்ட சிக்கபூவத்தி, தண்டேகவுண்டன அள்ளி, பெல்லம்பள்ளி தொகுதி, ஜிஞ்சுப்பள்ளி தொகுதி, கொம்பள்ளி, கூளியம் தொகுதி, செம்படமுத்தூர் ஆகிய தொகுதிகளில் உள்ள சிக்கபூவத்தி, தண்டேகவுண்டன அள்ளி, மரிக்கம்பள்ளி, ஆலப்பட்டி, அகரம், பெல்லம்பள்ளி தொகுதி, ஜிஞ்சுப்பள்ளி தொகுதி, கொம்பள்ளி, கங்கலேரி, கூளியம் தொகுதி, செம்படமுத்தூர், கொண்டேப்பள்ளி ஆகிய 12 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா, பட்டா ரத்து, ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு, புதிய குடும்ப அட்டை, கிராம கணக்கில் மாற்றம் என மொத்தம் 139 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட 12 கிராமங்களை சேர்ந்த கிராம கணக்கு பதிவேடுகளான அ பதிவேடு, எப்.எம்.பி. பதிவேடு, அடங்கல், 1 ஏ உள்ளடக்கம், பட்டா மற்றும் புறம்போக்கு பதிவேடு, தனிபட்டா, சிட்டா மற்றும் அடங்கல், L1600T வரவு பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நான்காவது நாள் இன்று குருபரப்பள்ளி உள்வட்டத்திற்குட்பட்ட பீமாண்டப்பள்ளி தொகுதி, லக்கபத்திலப்பள்ளி, குந்தப்பள்ளி, கொல்லப்பள்ளி, குப்பச்சிப்பாறை, புளியஞ்சேரி, சென்னசந்திரம் தொகுதி, ஆவல்நத்தம், புரம், அப்பிநாயக்கன்கோட்டை, கொண்டப்பநாயனப்பள்ளி, விருப்பசந்திரம், போலுப்பள்ளி தொகுதி, குருபரப்பள்ளி தொகுதி, ராகிமாகனப்பள்ளி, வி.மாதேப்பள்ளி, சூலாமலை, பொன்னப்பகவுனிப்பள்ளி, பந்திகுறிக்கி, சின்னக்கொத்தூர் ஆகிய 20 தொகுதிகளுக்குட்பட்ட 24 கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற உள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கை மனுக்களை ஜமாபந்தி அலுவலர்களிடம் வழங்கலாம். தகுதியான மனுக்கள் மீது உரிய மேற்கொண்டு உடனடி தீர்வு காணப்படும் என ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் குருநாதன், வட்டாட்சியர் சின்னசாமி, தனி வட்டாட்சியர்கள் மகேஸ்வரி, வடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர், கிராம நிர்வாக அலுவலர் பூபதி மற்றும் துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



