13 லயன்ஸ் சங்கங்களின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையை பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி மாவட்டத்தின் ஆளுநர் ராஜசேகர் தலைமையில் ஜி.எஸ்.டி ஒருங்கிணைப்பாளர் லயன் செந்தில்குமார் முன்னிலையில் மாவட்டத்தின் முதல் துணை ஆளுநர் செல்வராஜ், இரண்டாம் துணை ஆளுநர் சூரி நந்தகோபால். ஜி.எல்.டி ஒருங்கிணைப்பாளர் பாஸ் கர் ஆகியோர் வழங்கினர்.
வட்டாரத் தலைவர் அருண்குமார், தலைவர் மாதவன், மாவட்ட அமைச்சரவை செயலாளர் ரவிசங்கர், மண்டல தலைவர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண் டனர்.
இந்த விழாவில் கோவை வாரியர்ஸ், சின்னவேடம்பட்டி இண் டஸ்ட்ரியல் எஸ்டேட், சேலஞ்சர்ஸ், கிரியேட்டர், எண்டர் பரணர், ஸ்மார்ட் சிட்டி, மெரிட், நேரு நகர், பட்டீஸ்வரர், ராயல், பொள்ளாச்சி எக்ஸலன்ஸ், பொள்ளாச்சி ராயல், சிறு களந்தை ஆகிய 13 லயன்ஸ் சங்கங்கள் இணைந்து தையல் மெஷின் மருத்துவ உதவி, கல்வி உதவி, முதி யோர் இல்லத்திற்கு உதவி இதுபோன்று ரூ.5 லட்சத்திற்கு மேல் சேவை திட்டங்கள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



