லயன்ஸ் கிளப் 324-சி மாவட்டம் சார்பில், கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் ‘லியோ கிளப்’புகள் தொடங்கப்பட்டு, அதில் மாணவர்களை உறுப்பினர்களாகவும், பேராசிரியர்களைப் பொறுப்பாளர்களாகவும் நியமித்து, பல்வேறு சமூகச்சேவைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிறுவப் பட்ட ‘லியோ கிளப்’, அதிகளவில் பல்வேறு சமூகச்சேவைத் திட்டங்களைச் செயல்படுத்தி முதலிடம் பிடித்துள்ளது.
இதற்காக அண்மையில் சென்னையில் நடைபெற்ற விழாவில், லயன்ஸ் கிளப் 324-சி மாவட்டம் சார்பில்,‘ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ‘லியோ கிளப்’புக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
லியோ கிளப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். தங்க கிருஷ்ணன், லயன்ஸ் கிளப் 324-சி மாவட்டத் தலைவர் ஆர். லிங்கராஜ் ஆகியோர், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமாரிடம் விருதை வழங்கினர்.
கல்லூரியின் லியோ கிளப் பொறுப்பாளர்கள் முனைவர் ஜி.கவிதா, முனைவர் டி.பிரபு வெங்கடேஷ், லியோ கிளப் மாணவ நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.



