fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் போதை விழிப்புணர்வு உறுதிமொழி

திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் போதை விழிப்புணர்வு உறுதிமொழி

திருப்பூர் சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் போதை விழிப்புணர்வு உறுதிமொழியை அப்பாஸ் என்ற மாணவன் கூற மற்ற மாணவர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் காவல்துறை அதிகாரி கண்ணகி பேசுகையில், கண்டிப்பாக போதை பழக்கத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜ், போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமையை பற்றி எடுத்துரைத்தார். உதவி தலைமை ஆசிரியர் செலின் ராணி, போதை பழக்கத்தினால் வருகின்ற நோய்கள் பற்றி கூறி அதிலிருந்து முற்றிலும் விடுதலையாக வேண்டும் என்று கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img