கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் செயல்பட்டு வரும் ஆஷா குரூப்ஸ் நிறுவனத்தின் ஆஷா ஆறுமுகா பாரத் கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் அலுவலகத்தில் பாரத் கேஸ் 10 கிலோ காம்போசிட் சிலிண்டர் விற்பனை துவக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி மற்றும் ஜூவல் ஒன் சேர்மன் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.சீனி வாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விற்பனையை தொடங்கிவைத்தார். அதேபோல் பாரத் பெட்ரோலியம் கோவை மாவட்ட முதன்மை மேலாளர் சுரேஷ் பாபு, சேலம் மாவட்ட விற்பனை மேலாளர் விபோர் ஆகியோர் முதல் விற்பனையை தொடங்கிவைக்க கூடலூர் கவுண் டம்பாளையம் நகராட்சி தலைவர் அறிவரசு மற்றும் யுவா பப்ளிக் பள்ளி தாளாளர் சத்யா அறிவரசு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பாரத் கேஸ் நிறுவனம் தற்போது புதிய 10 கிலோ காம்போசிட் சிலிண்டர் குறைந்த எடை, எளிதில் கையாளும் வசதி மற்றும் நவீன வடிவமைப்பு உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிலிண்டர் வீட்டு உபயோகத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவை புறநகர் பகுதிகளில் விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் கோவை பெரியநாயக்கன்ப்பாளையம் வஞ்சிமா நகரில் செயல்பட்டு வரும் ஆஷா குரூப்ஸ் நிறுவனத்தின் ஆஷா ஆறுமுகா பாரத் கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் அலுவலகத்தில் பாரத் கேஸ் 10 கிலோ காம்போசிட் சிலிண்டர் விற்பனை துவக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி மற்றும் ஜூவல் ஒன் நிறுவன சேர்மன் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே சீனிவாசன் கலந்துகொண்டு கேஸ் சிலிண்டரை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தி விற்பனையை தொடங்கிவைத்தார்.
அதேபோல் பாரத் பெட்ரோலியம் பிராந்திய மேலாளர் சாசங்க் சர்மாவின் அறிவுறுத்தலின் பேரில் கோவை மாவட்ட முதன்மை மேலாளர் சுரேஷ் பாபு, சேலம் மாவட்ட விற்பனை மேலாளர் விபோர் ஆகியோர் முதல் விற்பனையை தொடங்கிவைத்தனர். அதனை கூடலூர் கவுண்டம்பாளையம் நகராட்சி தலைவர் அறிவரசு மற்றும் நாயக்கன்பாளையம் யுவா பப்ளிக் பள்ளி தாளாளர் சத்யா அறிவரசு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி மற்றும் ஜூவல் ஒன் நிறுவன சேர்மன் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே சீனிவாசன் தமிழ்நாட்டில் அதிக அளவு விற்பனை செய்து முதலிடம் பிடிக்க வேண்டும் என வாழ்த்தினார்.
கூடலூர் கவுண்டம்பாளையம் நகராட்சி தலைவர் அறிவரசு மற்றும் நாயக்கன்பாளையம் யுவா பப்ளிக் பள்ளி தாளாளர் சத்யா அறிவரசு ஆகியோர் பேசும்போது நிறுவனம் மென்மேலும் வளர தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பாரத் பெட்ரோலியம் கோவை மாவட்ட முதன்மை மேலாளர் சுரேஷ் பாபு, சேலம் மாவட்ட விற்பனை மேலாளர் விபோர் ஆகியோர் பேசும்போது பாரத் கேஸ் லைட் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த 10 கிலோ காம்போசிட் சிலிண்டர் இலகுவான எடை யும், அதிக பாதுகாப்பும் கொண் டதாக இருப்பதாகவும், புக்கிங் செய்த 4 மணி நேரத்தில் விநியோ கம் செய்யப்படும் எனவும் தெரிவித்த னர். ஆஷா குரூப் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஏ பாலசுப்பிரமணியம் பேசும்போது 10 கிலோ காம்போசிட் சிலிண்டர் விற்பனை துவக்க விழாவை ஒட்டி முதலில் வாங்கும் 100 வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 4,599 க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு நிறுவனம் சார்பில் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. இவ்விழாவில் நாயக்கன் பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் சந்துரு ஜெகவி, கூடலூர் நகராட்சி கவுன்சிலர்கள் பொன் மாடசாமி, பாலு, துரை செந்தில், பேங்க் முருகேசன், கணேசன், கோவை நாடார் மகாஜன சங்க தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் பாமா, ஆஷா, ஆஷிக், சலீம் பாஷா, தாரா, நவீன், ராகுல், காயத்ரி, பத்மாகண்ணன் உட்பட ஆஷா குரூப் ஆப் கம்பெனிஸ் அலுவலர்கள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



