fbpx
Homeபிற செய்திகள்‘பிலிப்ஸ் எக்ஸைமர் லேசர் சிஸ்டம்’ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அறிமுகம்

‘பிலிப்ஸ் எக்ஸைமர் லேசர் சிஸ்டம்’ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அறிமுகம்

கொங்கு மண்டலத்தில் முதன்முறையாக பிலிப்ஸ் எக்ஸைமர் லேசர் சிஸ் டத்தை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டது.

கோவையின் தலை சிறந்த பல்துறை சிறப்பு மருத்துவமனைகளில் ஒன்றான ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இதய சிகிச்சைகளை மேலும் சிறந்தமுறையில் வழங்கிட கொங்கு மண்டலத்தில் முதன்முறையாக அண்மையில் பிலிப்ஸ் லேசர் சிஸ்டத்தை (ELCA – Philips Laser System” and “PLS -Excimer Laser System)) பல்வேறு இதய நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை வழங்கும் ‘கேத் லேப்’ எனும் அதிநவீன ஆய்வகத்தில் அறிமுகம் செய்தது.

அறிமுக நிகழ்வில் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர் வாக அறங்காவலர் டி. லட்சுமி நாராயணஸ்வாமி, மருத்துவமனையின் இதயவியல் நிபுணர்கள் டாக்டர் பாலாஜி, டாக் டர் நந்தகுமார், டாக்டர் மாதேஸ்வரன், டாக்டர் மனோகரன், டாக்டர் விக்ரம் விக்னேஷ் ஆகி யோர் கலந்து கொண் டனர்.
தமிழகத்தில் சென் னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் இந்த பிலிப்ஸ் எக்ஸைமர் லேசர் சிஸ்டம் உள்ளது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அறிமுகப்படுத்த பட்ட இந்த உபகரணம் 360 கோணத்தில் நகரும் திறன் கொண்டது. இந்த உபகரணத்தை ஆன் செய்ததும் 30
விநாடி களுக்குள் தயாராகிவிடும் என்பதால் தீவிரமான மாரடைப்பு நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுவதற்கு உதவுகிறது.

இதை பயன்படுத்தி புறஊதா ஒளியின் மூலம் இதய அடைப்புகளை துல் லியமாக உடைக்கவும், ஆவியாக்கவும், அகற்றவும் செய்ய முடியும்.
அத்துடன் இதயத் தில் கரோனரி மற்றும் பெரிஃபெரல் வாஸ்குலேச் சரில் உள்ள அதிரோமா, ஃபைப்ரோஸிஸ், கால்சியம், த்ரோம்பஸ் மற்றும் நியோன்டிமல் ஹைப்பர் பிளாசியாவை உள்ளடக்கிய புண்களை முழுமையாக நீக்குதல் மற்றும் ஃபோட்டோ பிலேஷன் சிகிச்சைகளை செய்ய முடியும்.

படிக்க வேண்டும்

spot_img