fbpx
Homeபிற செய்திகள்பெண்களுக்கான பிரத்யேக ஆடையகம் அழகின் மறு வரையறை லஸ் கார்னர் அலங்கார ஸ்டோர்

பெண்களுக்கான பிரத்யேக ஆடையகம் அழகின் மறு வரையறை லஸ் கார்னர் அலங்கார ஸ்டோர்

சென்னை லஸ் சாலையில் உள்ள கிரியேட்டிவ் என்கிளேவில் தொழில் முனைவோரான நிவேதிதா, அவரது தந்தை ஏ.டி.புருஷோத்தமன் ஆகியோர் அலங் கார ஸ்டோர் என்ற பெண்களுக்கான பிரத்யேக ஆடையகத்தை திறந்துள்ளனர்.

இந்த ஆடையகம் அழகின் தரத்தை மறு வரையறை செய்து, பெண்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது. பரந்த அளவிலான ஆயத்த சல்வார் உடைகள், டாப்ஸ் கள், சிறியது முதல் 8XL வரையிலான அளவுகளில் கிடைக்கிறது.

டிசைனர் சல்வார் சூட்கள், தனிப்பயன் ஆடை பிளவுஸ்கள், ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் ஏற்ற உடைகள், வாடிக்கையாளர்கள் தங்களது தனிப்பட்ட விருப்பத்துக்கு வடிவமைத்துக்கொள்வதற்கு தைக்கப்படாத துணிகள் ஆகியவை விற்பனை செய்யப் படுகின்றன.

உடல் அளவு தான் அழகை தீர்மானிக்கிறது என்ற தவறான கருத்தை முறியடித்து பெண்களுக்கு பொருத்தமான ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியச் செய்து நம்பிக்கை அளித்து அழகின் தரத்தை மறு வரையறை செய்கிறது அலங்கார ஸ்டோர்.

படிக்க வேண்டும்

spot_img