Homeபிற செய்திகள்வால்பாறை சாலையில் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை சாலையில் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு

பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் 23 மற்றும் 24 கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் 3 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் தவித்து வருகின்றனர். மண் சரிவு ஏற்பட்டுள்ள இடத்தை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் வாகனங்கள் இருமார்க்கங்களிலும் செல்ல முடியாமல் மலைப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ளன.

படிக்க வேண்டும்

spot_img