காமராஜரின் 122வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி, அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
காமராஜரின் 122வது பிறந்த நாளை முன்னிட்டு வ.உ.சி மார்கெட் தெட்சண மாற நாடார் சங்கம் எதிர்புறம் அமைந்துள்ள காமராஜரின் உருவச் சிலைக்கு தூத்துக்குடி எம்.பி கனிமொழி கருணாநிதி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் காமரா ஜர் வேடம் அணிந்து வந்த சிறுவனுக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த் சேகரன், தூத்துக்குடி திமுக பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், ரெங்கசாமி, பெயரின் தனி உதவியாளர்கள் பிரபாகர், ஜேஸ்பர் உட்பட ஏராளமானவர்கள் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்.